ஜோக்ஸ்
‘‘இது கம்ப்யூட்டரைஸ்டு பட்டாசா... அப்படி என்ன ஸ்பெஷல் இதுல?’’ ‘‘பாஸ்வேர்டு போட்டாத்தான் வெடிக்கும்..!’’
‘‘மன்னா, போரில் துரத்திய எதிரி மன்னர் மீது, மகாராணி தீபாவளிக்கு செய்த லட்டுகளை வீச வேண்டாம் என்றேனே... கேட்டீரா?’’ ‘‘ஏன்... என்னவாயிற்று?’’ ‘‘போரில் நீங்கள் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது!’’
‘‘தலைவர் ஏன் இந்த வருஷம் ரிலீஸ் ஆகப் போற புது ரக பட்டாசுகள் பத்தி துருவித் துருவி விசாரிக்கறார்..?’’ ‘‘ஏதாவது பாயின்ட் கிடைச்சா ‘ரிலீஸ் பண்ணக் கூடாது’ன்னு போராட்டம் நடத்தி பப்ளிசிட்டி தேடறதுக்காம்..!’’
‘‘பண மதிப்பு ரொம்ப குறைஞ்சிட்டதால பட்டாசு விலை ஏறிப் போச்சு சார்...’’ ‘‘அதுக்காக பட்டாசுகளை கிராம் கணக்குல விக்கறது நல்லா இல்லை!’’
‘‘இந்தப் பட்டாசுக்கு முத்தம் தந்தா வெடிக்குமாமே..?’’ ‘‘ஆமாம்! இது லட்சுமி வெடிக்கு போட்டியா வந்த ‘இச் மீ’ வெடியாம்!’’
‘‘தலைவர் தன் வருமானத்தை வீட்டு வாசல்ல எழுதிப் போட்டிருக்காரே... ஏன்?’’ ‘‘வருமானத்துக்கு அதிகமா பட்டாசு வாங்கினதா, போன தீபாவளிக்கு வழக்கு போட்டாங்களே!’’
‘‘பாம்பு மாத்திரை ஏன் இப்படி விபரீத சைஸ்ல இருக்கு..?’’ ‘‘இது அனகோண்டா மாத்திரை சார்!’’
|