‘‘கபாலி மேல போலீஸ்காரங்க கோபமா இருக்காங்களே... ஏன்?’’
‘‘தீபாவளிக்கு 8.33% போனஸ் மாமூல்தான் தரமுடியும்னு கறாரா
சொல்லிட்டானாம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘என்னது... இலையில சங்கு சக்கரம் சுத்துது?’’
‘‘ஐயோ மாப்ளே... இன்னும் தெளியலையா? நல்லா பாருங்க... அது ஜாங்கிரி!’’
- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.
‘‘பட்டாசு வெடிச்சதும் உள்ளே இருந்து ஒரு பேப்பர் வருதேய்யா... எதுக்கு?’’
‘‘இது குற்றப் பத்திரிகை வெடி தலைவரே..!’’
- அம்பை தேவா,
சென்னை-116.
‘‘இந்த வெடியோட எதுக்கு ரிமோட் தர்றீங்க..?’’
‘‘உங்களுக்கு சவுண்ட் அலர்ஜின்னா, வெடிக்கும்போது ம்யூட்ல போட்டுக்கலாம்..!’’
- அ.ரியாஸ் அகமது, சேலம்.
தீபாவளி தத்துவம்
என்னதான் ஜா‘மூன்’னாலும் அதை ‘சன்’ஃபிளவர் ஆயில்லதான் செய்ய
முடியும்!
- ஆயிலை வைத்து தத்துவங்களை பாயில் செய்வோர் சங்கம்
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
‘‘வெங்காயம் விலை ஏறியிருக்கறது வாஸ்தவம்தான்... அதுக்காக வெங்காய வெடியையும் கன்னாபின்னான்னு விலை ஏத்தியிருக்கிறது ரொம்ப ஓவர்!’’
- வி.சகிதா முருகன்,
தூத்துக்குடி.
ஸ்பீக்கரு‘‘தலைவர் குடித்துக் குடித்து சேகரித்து வைத்துள்ள காலி பாட்டில்களை ‘ராக்கெட் வெடி’ விட சிறார்களுக்கு இப்போது இலவசமாக வழங்குவார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!’’
- ராம்ஆதிநாராயணன்,
தஞ்சாவூர்.