ஜோக்ஸ்





‘‘மன்னரின் உடலில் தீக்காயம் எப்படி உண்டானது..?’’
‘‘பணிப்பெண்கள் சாமரம் வீசுவதற்கு பதிலாக சரவெடிகளை வீசி விட்டார் களாம்...’’

‘‘இது வித்தியாசமான பட்டாசு கடைன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘வாங்கின பட்டாசு வெடிக்குதான்னு டெஸ்ட் பண்ணிப் பாக்க, தனியா ‘ட்ரையல் ரூம்’ இருக்கே!’’

‘‘என்னது? தொண்டர்கள் நான் வித்தியாசமா தீபாவளி கொண்டாடணும்னு விரும்பறாங்களா... எப்படி?’’
‘‘எண்ணெய் தேய்ச்சு குளிப்பதற்கு பதிலா தீக்குளிக்க சொல்றாங்க தலைவரே!’’

‘‘உன் அப்பாவி கணவருக்கு எப்படி அடிபட்டது..?’’
‘‘‘லேப்டாப் வெடி’ன்னு சொன்னா ங்கன்னு, அதை மடியில வச்சு வெடிச்சிருக்கார்...’’

‘‘கல்யாணமாகி 25 வருஷமா தொடர்ந்து தீபாவளிக்கு வந்து செலவு வச்ச மருமகனுக்கு...’’
‘‘என்ன செஞ்சார் அந்த மாமனார்?’’
‘‘ ‘வாழ்நாள் ரோதனையாளர்’ விருது வழங்கிட்டார்!’’


‘‘அவர் பெட்ல படுத்துக்கிட்டு தலையை சொறிஞ்சிக்கிட்டு இருக்காரே... ஏன்?’’
‘‘அதுவா... அவருக்கு தூக்கத்துல தீபாவளி இனாம் கேக்கற வியாதியாம்!’’

‘‘தலைவர் மேல போடப்பட்டுள்ளது அபாண்டமான வழக்குன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘பின்னே... லைசென்ஸ் வாங்காம தீபாவளி துப்பாக்கி வச்சிருந்தார்னு கேஸ் போட்டிருக்காங் களே!’’