மத்தாப்பு கனவகள் : கவிதைக்காரர்கள் வீதி





*    குழந்தைகள் சேமித்த
     உண்டியலில்
     நிரம்பி வழிகின்றன
     மத்தாப்பு கனவுகள்!

*     தீபாவளிக்கு
      தீச்சட்டி எடுத்து வரக்கூடும்
      கடவுளும்,
      குழந்தைகளை தரிசிக்க!

*     சங்கீத வகுப்பில்
      சேர்த்து விடச்சொல்லி
      கடவுளிடம் அடம் பிடிக்கலாம்
      குழந்தைகளின்
      குரல் கேட்ட பட்டாசுகள்!

*     எடைக்கு எடை
      கேட்கின்றன மத்தாப்புகள்
      குழந்தைகளின் புன்னகையை!

*     மௌனமாய் கேட்கிறது
      பொம்மைகளின் கைதட்டல்
      குழந்தை வைத்த
     வெடி வெடித்ததும்!

*     தீபாவளி பண்டிகை
      குழந்தைகளின் காலடியையே
     ‘சக்கரமாய்’ சுழல்கிறார் கடவுள்!

*     குழந்தைகள் வைத்த
    ‘ரயிலில்’ மட்டும்
     எப்படி வருகிறது
     புல்லாங்குழலின் இசை?