வாலிபக் கவிஞர் வாலிக்கு சக கவிஞர்கள் அஞ்சலி செலுத்தியிருந்ததைப் படித்து கண்கள் பனித்தன. மேலுலகையும் பாடல் எழுதி மகிழ்விக்கத்தான் காலன் அவரை பாசக் கயிறிட்டு அழைத்துச் சென்றானோ!
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்; மா.மாரிமுத்து, ஈரோடு; பேச்சியம்மாள், புதுச்சத்திரம்; அ.இராஜப்பன், கருத்தம்பட்டி. தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.
ஹோட்டலில் வாட்டர் பாயாக இருந்து, இன்று கெமிக்கல் எஞ்சினியர் ஆகி இருக்கும் பொன்னுதுரை, வளரும் தலைமுறைக்கும் பெரியதொரு பென்ச் மார்க். தன்னம்பிக்கை, முயற்சி மற்றும் உழைப்புக்கு வெற்றி நிச்சயம் என்பதை அவர் நிரூபித்துக் காட்டி விட்டார்.
- தாராபுரம் தமிழ், சென்னை-78;
ஆர்.கே.லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்; எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.
நாளாக நாளாக நயனுக்கு வயது குறைகிறதோ! ‘இது கதிர்வேலன் காதல்’ பட ஸ்டில்களில் உதயநிதி ஜோடியாக அவர் தோற்றம் செம ஃப்ரெஷ்!
- நாராயணன், சென்னை - 91
‘மீட்டர் உண்டு... பில்லும் உண்டு...’ என்று சொல்லும் ‘நம்ம ஆட்டோ’, ஆச்சரியப்பட வைத்தது. மக்களுக்கு பயனுள்ள இந்த சேவை, சென்னையைத் தாண்டி தமிழகம் முழுக்கப் பரவ வேண்டும் என வாழ்த்துவோம்!
- எஸ்.வாசுதேவன், சென்னை-14.
‘ஷூட்டிங் ஸ்பாட், ஜிம், வீடு தவிர வேறு எங்கேயும் விக்ரமைக் காண முடியாது’ என்பது ஓகே. அதற்காக, புகைப்படத்தில் கூடவா சரியாகக் காட்டக் கூடாது? இப்படி மறைத்து வைத்து வரப் போகும் ‘ஐ’ என்னென்ன ஆச்சரியங்களைத் தரப் போகிறதோ!
- சக்தி இளங்கோ, தஞ்சாவூர்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை;
இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; எஸ்.புவனா, சென்னை-94.
‘ஆதார்’ அட்டையைப் பற்றிய மக்களின் குழப்பங்கள், சந்தேகங்களைத் தீர்த்ததுடன், அதை எப்படிப் பெற வேண்டுமென வழிமுறையும் சொன்ன ‘குங்குமம்’ இதழின் சமூகப் பொறுப்புக்கு ஹேட்ஸ் ஆஃப்!
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; கவியகம் காஜூஸ், கோவை-24; இராம.கண்ணன், திருநெல்வேலி.
டென்ஷனைக் குறைக்கும் நடனப் பயிற்சியா? உங்கள் போட்டோவில் இருப்பது போல அழகுப் பெண்கள் நடனமாடினால் பார்ப்பவர் டென்ஷன் குறைவது நிச்சயம். ஆடுகிறவர் டென்ஷனும் குறைவதுதான் ஆச்சரியம்!
- துரை, திருச்செங்கோடு.
நகைச்சுவை மன்னர் நாகேஷ் வாழ்வில் சோக வடுகள் நிறைந்துள்ளதை நடிகர் சிவக்குமார் வழி அறிந்தபோது மனம் கனத்தது. அதிலும், நாகேஷின் அம்மா பற்றிய அந்த சோக நிகழ்ச்சி, கண்களைக் குளமாக்கிவிட்டது!
- கண்ணன்,திருமங்கலம்.