ஜோக்ஸ்




‘‘ஜெயில்ல இருக்கிற நம்ம தலைவரோட தண்டனைக் காலத்தை அதிகரிச்சுட்டாங்களா... எதுக்கு?’’
‘‘ஜெயில்ல தோட்ட வேலை பார்க்குற சாக்குல அங்கே கஞ்சா செடி பயிரிட்டுட்டாராம்..!’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘ஏன் கபாலி... டூரிஸ்ட்டா வந்த அமெரிக்காகாரன்கிட்டயே உன் கைவரிசையை
காட்டிட்டியே?’’
‘‘நம்ம தொழில்ல இப்போ அந்நிய முதலீட்டையும் ஆதரிக்கிறோம் ஏட்டய்யா!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
    
என்னதான் ரொம்ப ரொம்ப ஸ்பீடா மந்திரம் சொன்னாலும், அதை ‘ஸ்பீடு கம்’னு
சொல்ல முடியாது...
‘ஸ்லோகம்’னுதான்
சொல்லணும்!
- புரோகிதருக்கே மந்திரம் சொல்லிக்
கொடுத்து அர்ச்சனை செய்வோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

‘‘தலைவரே...
ஸ்கோர் என்ன?’’
‘‘இந்த வாரம் மூணு எம்.எல்.ஏக்கள்
ஓடியிருக்கறாங்க...’’
‘‘தலைவரே... நான் கிரிக்கெட் ஸ்கோர் கேட்டேன்..!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘வெளியூர்ல இருந்து திருட வர்றவங்களை துரத்தறதுக்குன்னே கபாலி ஒருத்தனை வெச்சிருக்கானாமே..?’’
‘‘ஆமாம் ஏட்டய்யா! கும்கி திருடனாம்...’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘வழியில் இரண்டு, மூன்று பார்களைக் கடந்து தலைவர் வர வேண்டியிருப்பதால் கால தாமதத்திற்கு மன்னித்து, தலைவர் வரும் வரை அனைவரும் அமைதி காக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!’’
- தேவதாசன், சொக்கம்பட்டி.

‘‘குற்றப் பத்திரிகை வாங்கின தலைவர் குஷியா இருக்காரே... என்ன விஷயம்?’’
‘‘இலவச இணைப்பா ‘முன்ஜாமீன் வாங்க சில யோசனைகள்’னு புத்தகம் கொடுத்தாங்களாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.