‘‘கட்சி ஆபீஸ்ல நூற்றுக்கணக்கா செருப்புகளை அடுக்கி வச்சிருக்காங்களே... ஏன்?’’
‘‘தலைவர் மேல மக்கள் எறிஞ்ச செருப்புகளை ‘ஆடித் தள்ளுபடி’யில விற்பனை செய்ய வச்சிருக்கறார்..!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘ஓட்டல்ல பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டு தலைவர் டென்ஷன் ஆகிட்டாரா... ஏன்?’’
‘‘அதுல அவரோட குற்றப் பத்திரிகை வெளியாகி இருக்காம்!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.
‘‘கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்தவங்களுக்கு தலைவர் நல்லி எலும்பா சமைச்சுப் போடுறாரே... எதுக்கு?’’
‘‘வலுவான கூட்டணி அமைக்கப் போறாராம்...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘ஆனாலும் ‘சிங்கம்-2’ பாதிப்பு இந்த அளவுக்கு இருந்திருக்கக் கூடாது...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் பட்டியலில், சூர்யாவை காத்திருப்போர் வகையறாவில் சேர்த்திருக்காங்களே..!’’
- எஸ்.ராமன், சென்னை-17.
என்னதான் டாக்டர் வீடுன்னாலும், வீட்டுக்கு விளக்கேத்த யாரும் பிளாஸ்‘திரி’யை பயன்படுத்த மாட்டாங்க!
- வீட்டுக்கு விளக்கேத்த ஃபிகர் தேடி அலையும் பேச்சிலர்கள் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘ஜெயில்ல இருக்கற தலைவருக்கு என்ன பிரச்னை..?’’
‘‘கனவுல நடிகைகள் வராம, அவங்களோட குடும்ப வக்கீல்கள் மட்டும் வர்றாங்களாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.
நீங்க எவ்வளவு காஸ்ட்லியான ‘குண்டூசி’ வாங்கினாலும் அது ஒல்லியாதான் இருக்கும்!
- ‘பின்’னை வைத்துக் கொண்டு ‘பின்’நவீனத்துவம் பேசுவோர்
சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.