தத்துவம் மச்சி தத்துவம்




என்னதான் ஒருத்தர் நீச்சல்ல சாம்பியன்னாலும், அவரால மகிழ்ச்சி வெள்ளத்தில் எல்லாம் நீந்த முடியாது
- ஏ.டி.தமிழ்மணி, தளிகைவிடுதி.

‘‘தலைவருக்கு பேராசை அதிகமாயிடுச்சா... எப்படிச் சொல்றே?’’
‘‘நூறு கோடியில தனக்கும் சிலை வைக்கச் சொல்லி கேட்கறாரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

என்னதான் பெண்கள் நிர்வாகம் பண்ணினாலும், பற்றாக்குறை பட்ஜெட்னா ‘துண்டு’தான் விழும்; ‘துப்பட்டா’ எல்லாம் விழாது!
- துப்பட்டா... துப்பட்டா...
என வாயில் ஜொள்ளோடு
அலைவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘இந்த டாக்டருக்கு மட்டும் நிறைய பேஷன்ட்ஸ் வர்றாங்களே... எப்படி?’’
‘‘ஐ.பி.எல் மேட்ச்களில் ஆடிய சியர் கேர்ள்ஸை நர்சுகளா வேலைக்கு வச்சிருக்காராம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘தலைவரை திடீர்னு போலீஸ் அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போகுதே... ஏன்?’’
‘‘கிரிக்கெட் சூதாட்டத்தில் எந்தெந்த வீரருக்கு தொடர்பு இருக்குன்னு ஒரு சூதாட்டம் நடத்தி நிறைய சம்பாதிச்சிட்டாராம்!’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘வெற்றியடையும் நிலையில் இருந்த நம் படை கடைசி நேரத்தில் தோல்வி நிலைக்குச் சென்றது எப்படி தளபதியாரே..?’’
‘‘புக்கிகள் மூலம் போர் ஃபிக்ஸிங் நடந்திருக்கும் என நினைக்கிறேன் மன்னா!’’
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘‘தலைவரோட புத்தி ஏன்தான் இப்படிப் போகுதோ..!’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘கிரிக்கெட்ல ‘மேட்ச் ஃபிக்சிங்’ மாதிரி, தேர்தல்ல ‘வோட் ஃபிக்சிங்’ பண்ண முடியுமான்னு கேக்கறாரே..!’’
- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.