ஜோக்ஸ்





‘‘சிஸ்டர்! உங்க டாக்டருக்கு இன் பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா... அவுட் பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா?’’
‘‘டாக்டரால அவுட்டான பேஷன்ட்ஸ்தான் ஜாஸ்தி!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘தொண்டர்கள் கூலி உயர்வைத் திரும்பப் பெறா விட்டால், நாங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதையே அடியோடு நிறுத்த வேண்டிவரும் என எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘என்னய்யா இது... மாமூல்னு சொல்லி கபாலி ஒரு ரூபா குடுத்துட்டுப் போறான்..?’’
‘‘இன்னைக்கு மலிவுவிலை உணவகத்துலதான் திருட முடிஞ்சுதாம்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

என்னதான் தூங்கிக்கிட்டிருக்கிறவர் முகத்துல டார்ச் லைட் அடிச்சு தொந்தரவு பண்ணாலும், அதை ‘டார்ச் லைட்’னுதான் சொல்லுவாங்க. ‘டார்ச்சர் லைட்’னு சொல்ல மாட்டாங்க!
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘தலைவர் தப்புக்கணக்கு எழுதி ஊழல் பண்றதா இருந்தா ஒரு டாக்டரை வச்சுத்தான் கணக்கு எழுதுவாரு...’’
‘‘ஏன்..?’’
‘‘அப்பதான் கையெழுத்து புரியாம சி.பி.ஐ தலையை பிச்சிக்குமாம்!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

பால் கெட்டா குப்பையில கொட்டிடலாம்; பழம் கெட்டா குப்பையில கொட்டிடலாம்... ஆனா, தூக்கம் கெட்டா அதை குப்பையில கொட்ட முடியுமா?
- விடிய விடிய விழித்திருந்து யோசிப்போர் சங்கம்
- கே.தண்டபாணி, பொள்ளாச்சி.

‘‘தலைவர் மேடைதோறும் குட்டிக் கதை சொல்லியிருக்க
வேண்டாம்...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘கதை கேட்டுத்தான் கால்ஷீட் கொடுப்போம்னு தொண்டர்கள் இப்ப கறாரா சொல்றாங்களாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.