சூப்பர் ஸ்டாருக்கு ஒரு ‘பாயும் புலி’ போல் சசிகுமாருக்கு ஒரு ‘குட்டிப்புலி’யோ!
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு; க.மோகன், திருவண்ணாமலை; நா.நடேசன், திருவிடைமருதூர்.
வாஸ்து என்ற பெயரில் வலம் வரும் கிறுக்குத்தனங்களுக்கு பாம்பு வளர்ப்பே சாட்சி. ஆனால், வாஸ்துவுக்காக ஏன் பாம்பை வளர்க்க வேண்டும்? அதைவிட மோசமான ஜந்துவான மனிதனே வீட்டில் வளர்கிறானே!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி; மயிலை.கோபி, சென்னை-83; எஸ்.பிரசன்னகுமார், வேலூர்.
‘இனி தேவையில்லை இன்சுலின்’ என்பது, கசப்பின் விளிம்பில் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி! ‘பீட்டாட்ராபின்’ ஊசிக்கு ஒரு ஓ போடுவோம்!
- இ.பசரியா, திருச்சி; இரா.வளையாபதி, கரூர்; எஸ்.நாகராஜன், திருச்சி; நா.வைரவன், சிதம்பரம்.
அய்யோ பாவம்... எக்கச்சக்க செலவு செய்து வெளியே வந்து விட்டாலும், நம்ம ‘பவர் ஸ்டார்’, இப்ப ‘பவர்’ கட் ஆகி, ஷூட்டிங் போகாமல் வீட்டில் கிடக்கிறாரா? என்ன கொடுமை சார் இது!
- சந்திரன், சிவகங்கை.
பிபாஷா பாசு அறிவித்துள்ளபடி கணவர் கிடைக்க அவங்க தவமே பண்ண வேண்டியிருக்கும். அந்தக் கஷ்டம் எதுக்கு தாயி... ‘இப்பவே கிடைச்சதை லவ் பண்ணா, நிக்கலாம் சீக்கிரம் மணப்பெண்ணா!’
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
கிரிக்கெட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், கிரிக்கெட் ரசிகனுக்கு..? கிரிக்கெட் வெற்றியை பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெற்றி போலவே கொண்டாடும் ரசிகன் என்ன அகால் துகால்னு நினைச்சீங்களா?
- எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்; எஸ்.வாசுதேவன், சென்னை-14.
+2 முடித்திருக்கும் மாணவச் செல்வங்களுக்கு டைமிங் உதவியாய் எஞ்சினியரிங் படிக்க எது நல்ல கல்லூரி என்பது போன்ற தகவல்களை கல்வி ஸ்பெஷலாகத் தந்திருப்பது சிறந்த கல்விச் சேவை!
- எஸ்.சங்கர்குமார், புதுச்சேரி.
‘யமுனா’ படத்தில் ஹீரோ சத்யா பயத்திலும் வெட்கத்திலும் நிறைய டேக் எடுத்தாரா? ஹீரோயின் மேல இருக்குற பாசத்திலும் பற்றிலும் எடுத்தாரா? ஸ்டில்ஸ் பார்த்தா சந்தேகமா இருக்கு பாஸ்!
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.
‘பரதேசி’ படத்துக்குக் காரணமான வால்பாறை இன்னும் அப்படியே இருப்பதும், அங்குள்ள மக்கள் வாழ வழியில்லாமல் வெளியேறுவதும் கொடுமையிலும் கொடுமை. இன்னமும் ‘செந்தேனீரில் பாதி கண்ணீர்தானா?’
- கே.ரம்யா ராஜன், கடலூர்.
பாலா பழனி தன் புகைப்படக் கண்காட்சி மூலம் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு பெரும் தொண்டு செய்வது, அரிய பெரிய தெய்வப் பணிக்கு ஈடானது.
- சி.பா.சந்தானகோபாலகிருஷ்ணன், மஞ்சக்குப்பம்.