‘‘ஒரு புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிப்பதாக
உள்ளது மன்னா...’’
‘‘என்ன அமைச்சரே..?’’
‘‘நமது படைவீரர்களைக் காட்டிலும் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது..!’’
- சுப.தனபாலன்
என்னதான் 100 கோடியில தமிழ்த்தாய்க்கு சிலை வச்சாலும், அதைப் பாக்குற குழந்தை ‘வாட் ஈஸ் திஸ் மம்மி’ன்னுதான் கேட்கும்.
- தமிழ்த்தாயின் எதிர்காலம் குறித்து தவிப்போர் சங்கம்
- அ.இராஜப்பன்
‘ஃபேஸ்புக்’னு சொல்றோம். அதைப் படிச்சி முடிச்சிட்டு பட்டாணிக் கடையில போட முடியுமா?
- ஓசி பேப்பரையும் படிச்சுட்டு எடைக்குப் போடுவோர் சங்கம்
- பி.பாலாஜிகணேஷ்
‘‘தலைவர் தேவையில்லாத கேள்வியெல்லாம் கேக்குறார்...’’
‘‘அப்படி என்ன கேட்டுட்டார்?’’
‘‘நயன்தாரா அடுத்து யாரைக் காதலிப்பார்னு கேக்குறார்!’’
- அ.பேச்சியப்பன்
‘‘மேடையில தலைவர் பேசுறப்ப, மைக்குக்கு முன்னாடி எதுக்கு ஜெயில் கதவு மாதிரி கம்பி வச்சி டிசைன் பண்ணியிருக்காங்க..?’’
‘‘கம்பிக்குப் பின்னாடி நின்னு பேசிப் பேசியே பழக்கமாயிடுச்சாம்!’’
- ஏ.எஸ்.நடராஜ்
என்னதான் ஒருத்தர் டயட்னு சொல்லி கொஞ்சமா சாப்பிட்டாலும், விருந்துன்னு போனா வாழை இலையிலதான் சாப்பிடணும்; வெற்றிலையில சாப்பிட முடியாது!
- டயட் இருந்தே டயர்ட் ஆனோர் சங்கம்
- பெ.பாண்டியன்
‘‘எங்க வீட்ல திருடி முடிச்சதும், அப்படியே ஒரு நடை எதிர் வீட்டுக்கும் போயிட்டுப் போ...’’
‘‘எதுக்கு..?’’
‘‘இல்லாட்டி, ‘உங்க வீட்டுக்கு மட்டும் திருடன் வந்தானா’ன்னு அவன் பொறாமைப்படுவான்!’’
- ஏ.நாகராஜன்