ஜோக்ஸ்





‘‘மன்னா, என் அக்கவுன்ட் நம்பர் 5656432879...’’
‘‘என்ன புலவரே இது..?’’
‘‘என் பாடலுக்கான பரிசுத் தொகையை இந்த எண்ணிற்கு நெட் பேங்கிங்கில் ஆர்டிஜிஎஸ் செய்து விடுங்கள் மன்னா!’’
- சுப.தனபாலன்

‘‘அமைச்சர் ஆகற மாதிரி கனவு கண்டும் தலைவர் வருத்தமா இருக்காரே... ஏன்?’’
‘‘மூணு நாள் மட்டும் அமைச்சரா இருக்கிற மாதிரிதான் கனவு வந்ததாம்!’’
- பர்வீன் யூனுஸ்

‘‘ஓட்டலைத் திறந்து வச்ச தலைவர் என்ன கேட்கிறார்..?’’
‘‘ஒரு மாசத்துக்கான சாப்பாடு டோக்கன்..!’’
- பர்வதவர்த்தினி

‘‘நம்ம தலைவர் கட்சி மாறப் போறார்னு
எப்படிச் சொல்றே..?’’
‘‘புதுப்புது கார்ல போற மாதிரி அடிக்கடி கனவு வருதுன்னு சொல்றாரே..!’’
- எஸ்.சங்கர்

‘‘எதுக்கு தலைவரே பொதுக் கூட்டத்தை ஏ.சி ஹால்ல போட்டிருக்கீங்க..?’’
‘‘வெயிலுக்கு பயந்தாவது கொஞ்சம் தொண்டர்கள் என் பேச்சை கேட்க வரலாமில்லையா... அதான்!’’
- பெ.பாண்டியன்

என்னதான் எதையும் எதிர்பார்க்கக் கூடாதுன்னாலும், ஏ.டி.எம் மெஷின்ல கார்டைச் சொருகி, பின் நெம்பரை அழுத்திட்டு, பணம் வெளியில வரும்னு எதிர்பார்க்காம இருக்க முடியுமா?
- கடமையைச் செய்து பலனை எதிர்பார்ப்போர் சங்கம்
- கே.தண்டபாணி

என்னதான் ஆராய்ச்சி மணியா இருந்தாலும், அதைக் கொண்டு போய் சயின்ஸ் லேப்ல எல்லாம் கட்ட முடியாது!
- ஆராய்ச்சி மணியை அடித்து டாக்டர் பட்டம் வாங்க விரும்புவோர் சங்கம்
- டி.பச்சமுத்து