கவிதைக்காரர் வீதி

ரசனை முத்தம் வாங்கியபடியே இசைக்கிறது புல்லாங்குழல் - பொ.ராஜா
ஆசை கீழே கிடந்த ரூபாயை எடுத்தபோது எழுந்த ஆசை, தொலைத்தவனின் துயரத்தை தூர விரட்டியது - கே.சிவகணேசன்
உருகுதல் ஒரு கரத்தில் ஐஸ்கிரீமை பிடித்துக்கொண்டு இன்னொரு ஐஸ்கிரீம் வேண்டுமென்று அழுகிறாள் அபிக்குட்டி. அழுகுரல் கேட்டு உருகி வழிகிறது ஐஸ்கிரீம் அபிக்குட்டியின் குட்டி விரல்களிலிருந்து - ரவிஉதயன்
ஏக்கம் தூங்கும் குழந்தையின் அணைப்பிலிருந்து நழுவிய பொம்மை, எப்போது கண்விழிக்கும் என ஏக்கத்தோடு பார்க்கிறது குழந்தையை - அ.சுகுமார்
அறிமுகம் ப்ளேஸ்கூலில் சேரும் குழந்தை புதுப்புது விளையாட்டுகள் சொல்லித் தரப் போகிறது அங்குள்ள டீச்சருக்கு! - நா.கிருஷ்ணமூர்த்தி
வசீகரம் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்படுவதே வசீகரிக்கிறது குழந்தையை - வீ.விஷ்ணுகுமார்
|