ஜோக்ஸ்





‘‘தலைவர் பிரிஸ்கிரிப்ஷன் எரிப்பு போராட்டம் துவக்கறாரே... ஏன்?’’
‘‘டாக்டர் பட்டம் கிடைக்காத கோபம்தான்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘நான் சொன்னேன்ல... மாப்பிள்ளை தீவிர கிரிக்கெட் ரசிகர்னு!’’
‘‘அதுக்காக பொண்ணு பார்க்க வந்த இடத்துலயும் சியர் கேர்ள்ஸ் ஆட்டம் ஏற்பாடு பண்ணச் சொல்றது நல்லா இல்ல...’’
- தேவதாசன், சொக்கம்பட்டி.

‘‘என்னது... மகளிரணித் தலைவி பேசும்போது மட்டும் பலமா கை தட்டறாங்க?’’
‘‘நம்ம தலைவர் ஸ்பெஷலா பணம் கொடுத்து ஏற்பாடு பண்ணியிருக்காராம்..!’’
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘டாக்டர்... என் கனவுல நயன்தாரா வர்றாங்க..!’’
‘‘கூடவே ஆர்யா வராம இருக்க நான் மாத்திரை தரணுமாக்கும்..!’’
- ராம்.ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

‘‘அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி தலைவர் செருப்புக் கடை வைச்சிருந்தார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘அவர் மேல வந்து விழற செருப்போட விலையை எல்லாம் கரெக்டா சொல்றாரே..!’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘உங்களை அசைவம் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேனே... பின்ன ஏன் சாப்பிட்டீங்க?’’
‘‘நம்புங்க டாக்டர்! நான் சைவம்தான் சாப்பிடுறேன்... எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கிற மிருகம்தான் அசைவம் சாப்பிடுது!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘அந்தக் கட்சியில நிறைய பணம் இருக்கும் போலிருக்கு...’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘கட்சி தாவி வர்றவங்களுக்கு ஹெலிகாப்டரே தர்றாங்களாம்!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.