‘‘தலைவர் அடம் பண்றது சரியில்லை...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘குழந்தைக்கு பேர் வைக்கச் சொன்னா, குழந்தையோட அம்மாவுக்கும் பேர் வைப்பேன்ங்கறார்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘ஜாமீன்ல வெளியே வந்த நம்ம கட்சிக்காரங்களை எல்லாம் கூப்பிட்டு, தலைவர் என்ன கூட்டம் நடத்துறார்..?’’
‘‘செயல்வீரர்கள் கூட்டம் மாதிரி இது ‘ஜெயில் வீரர்கள்’ கூட்டமாம்..!’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
‘‘டாக்டர்... ஆபரேஷனைத் தவிர வேற வழியே இல்லையா?’’
‘‘இருக்கே... நீங்க ஆஸ்பத்திரிக்கு நன்கொடையா பணம் கொடுக்கலாம்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தலைவரை நடுரோட்டுல விட்டுட்டுப் போயிட்டாங்க...’’
‘‘கூட்டணி கட்சிக்காரங்களா..?’’
‘‘ம்ஹும்... கூட தண்ணி அடிச்சவங்க!’’
- சி.சாமிநாதன், கோவை.
‘‘ஆபரேஷன்ல தையல் போட்ட இடத்துல ஏதோ எழுதி இருக்கீங்களே... என்ன டாக்டர் அது?’’
‘‘நீங்க தர வேண்டிய ஃபீஸ் பாக்கியை குறிச்சுருக்கேன்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.
‘‘தலைவருக்கு மட்டும் மாதா மாதம் தவறாம குற்றப்பத்திரிகை அனுப்பிடுறாங்களே... எப்படி?’’
‘‘தெரியாத்தனமா குற்றப்பத்திரிகைக்கு ஆண்டுச் சந்தா கட்டித் தொலைச்சிட்டாரு...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘தலைவர் நல்லா ஏமாந்துட்டாரா... எப்படி?’’
‘‘நடிகை கையால ஜூஸ் கொடுத்து உண்ணா
விரதத்தை முடிச்சு வைப்போம்னு சொல்லிட்டு, ஒரு குழந்தை நட்சத்திரத்தை கூட்டிட்டு வந்துட்டாங்களாம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.