Brain Storage
Calling Bell : தமிழில் சிற்றிலக்கியங்கள் (பழைய கணக்கின்படி) 96 உண்டு. ஒவ்வொன்றும் தனி ரகம். அதில் ஒன்று ‘கடைநிலை’ என்பது. அதாவது அரசனின் வாயிலில் நின்று, தான் வந்திருப்பதை அறிவிப்பது. விடியற்காலையில், ஔவையார் அதியமானின் மகன் எழினியின் அரண்மனை வாயிலில் நின்று கொண்டு, யானைக் காலடி போன்ற தன் ‘ஒருகண் மாக்கிணை’ எனும் பறையை முழக்கினாராம். உடனே எழினி வந்து உள்ளே அழைத்துச் சென்று விருந்து படைத்தானாம். கடினமான குளிராகவோ அல்லது வெப்பமாகவோ சுற்றுச்சூழல் மாறும்பொழுது, சில வகை நத்தைகள், சுமார் மூன்று வருடம் வரைகூட தமது ஓட்டினுள்ளே தூங்கும் சக்தி கொண்டவை; தமது சுற்றுப்புற சூழல் சாதகமானவுடன் நார்மல் வாழ்க்கைக்குத் திரும்பும். கொசுறு: பூனைகள் தினமும் சுமார் 15 மணி நேரம் தூங்குகின்றன.
விலங்குகளும் கனவு காண்கின்றன. ஆம்! நாம் கனவு காணும்போது, நமது உறக்கம் REM (Rapid Eye Movement) எனும் நிலையில் இருக்கும். அப்போது மூளை மிக அதிக செயல்பாட்டுடன் இருக்க, உடலோ தற்காலிக செயலிழந்த (temporary paralysis ) நிலையில் இருக்கும் - கனவோடு சேர்ந்து நமது உடலும் செய்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காக.
நாய்கள், பூனைகள், எலிகள், சில பறவை வகைகள் போன்றவைகளின் தூக்க நிலையை ஆராய்ச்சி செய்து, அவையும் REM வகை தூக்க நிலையை அனுபவிப்பதால், அந்நேரத்தில் கனவு காண்கின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நிலவை விட அகலமானது ஆஸ்திரேலியா. நிலவின் அகலம் சுமார் 3400 கி.மீ. ஆஸ்திரேலியாவின் (கிழக்கில் இருந்து மேற்கு) அகலமோ சுமார் 4000 கி.மீ.
ராஜேஷ் சுப்ரமணியன்
|