என்ன கருமம்டா இது?!



தெரியுமே... படத்தில் இருப்பவர் ஹூமா குரேஷி என்று சொன்னதுமே, ரஜினியுடன் ‘காலா’வில் நடித்தவர்; அஜித்துடன் ‘வலிமை’யில் வித்தை காட்டியவர் என்றெல்லாம் விரல் நுனியில் டேட்டாவை அடுக்குவீர்கள்.
போலவே தில்லியில் பிறந்து வளர்ந்தவர்... தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்... இந்திப் பட நடிகை... இவரது அப்பா 10க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட ரெஸ்டாரண்டுகளை நடத்தி வருகிறார்... இத்யாதி... இத்யாதி... என தகவல் களஞ்சியமாக, புள்ளி ராஜா / புள்ளி ராணியாக தகவல்களைக் கொட்டுவீர்கள்.இப்படி செய்வீர்கள் என்றுதான் இவை எதையும் சொல்லப் போவதில்லை.

குறிப்பிட விரும்புவது வேறொரு விஷயத்தை.

ஹூமா ‘ஹும்ம்ம்ம்ம்மா’ என பெருமூச்சு விடும் வகையில் ஒரு டி-ஷர்ட் அணிந்திருக்கிறார் அல்லவா?

ஆங்காங்கே கிழிந்திருப்பதால், கையில் காலணா இல்லாமல் கிழிசல் உடையைப் போட்டிருக்கிறார் என தப்புக் கணக்குப் போடாதீர்கள்.

இந்த டி-ஷர்ட் - ஆமாம்... கிழிசல் பனியன்தான் - இப்பொழுது ஃபேஷன்.விலை?

அதிகமில்லை. ஜஸ்ட் ரூ.65 ஆயிரம்தான்!

காம்ஸ் பாப்பா