BRAIN STORAGE
திருக்குறளின் முதல் அச்சுப்பிரதி 1812ல், ஆங்கிலேய அரசு அதிகாரி பிரான்சிஸ் எல்லிஸ் என்பவரின் முயற்சியால் வெளிவந்ததாக அறியப்படுகிறது. இதன் பின்னால் சுவாரசியமான கதை உண்டு.
அந்த அதிகாரியிடம் பட்லராக வேலை பார்த்த (கந்தப்பன்) கந்தன் பண்டிதர் (அயோத்திதாசரின் தாத்தா), திருக்குறளின் ஓலைச்சுவடிகள்அடுப்பு எரிப்பதற்கு பயன்படுத்தப்படுவதைப் பார்த்து, அவற்றைச் சேகரித்து எல்லிஸிடம் கொடுக்க, எல்லிஸ் அவற்றை முறைப்படுத்தி அச்சுப் பிரதியாகக் கொண்டு வந்தார். கொசுறுத் தகவல்: இந்த ஆங்கிலேயர் எல்லிஸ்தான், முக்கிய தென்னிந்திய மொழிகள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று ஆராய்ந்து, அது பற்றிய ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டார்.
ஒரு பசுவின் மேல் ஒரு பூனை உட்கார்ந்திருக்கிறது. அருகில் காற்று ஊதிய காகிதப் பைகளை சத்தத்துடன் உடைத்தால், பசுவின் பால் சுரக்கும் தன்மை எவ்வாறு பாதிக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி. அதற்கு ஒரு நோபல் பரிசு.
ஆனால், இது வேறு விதமான நோபல் பரிசு - அதன் பெயர் IG NOBEL. நோபல் பரிசுக்குப் போட்டியாக, ஒரு நையாண்டியான நோக்கத்துடன் அமெரிக்காவில் உள்ள MIT பல்கலைக்கழகத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறை ஆராய்ச்சிகளுக்காக வழங்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த IG NOBEL பரிசுகளை, பரிசு பெற்றவர்களுக்கு வழங்குவது உண்மையான நோபல் பரிசு பெற்றவர்கள்! மாமிச மலை என்றே நீலத் திமிங்கலத்தை (blue whale ) சொல்லவேண்டும். ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை சுமார் 130 முதல் 150 டன் இருக்கும். அதன் இதயத்தின் எடை சுமார் 180 கிலோ. சும்மா அதிருதுல்ல!
ராஜேஷ் சுப்ரமணியன்
|