9 கோள்களும் ரூ.5 ஆயிரம் கோடியும்!
-செய்தி பாத்தியாடா..? - என்னவாம்..? - சிலி நாட்டுல நம்ம நாட்டு மதிப்புல சுமாரா 5000 கோடி ரூபா செலவுல டெலஸ்கோப் இன்ஸ்டால் பண்றாங்களாம்...
 - அப்படியா..? - ஆமா... 14 ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து இத நிறுவுதாம்... - அப்புறம்..? - இதுக்கு மொத்தம் 5000 கோடி ரூபா செலவாகுமாம்...! - அம்மாடியோவ்... அப்புறம்..? - இது ஜெர்மனில இருக்கிற ஹப்பிள் டெலஸ்க்கோப்ப விட நவீனமா இருக்குமாம்...
 - ஓ... - அப்புறம் இதுக்கு அமைக்கிற கோபுரம் 3000 மீட்டர் உயரமிருக்குமாம்... - அதாவது திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டுல இருந்து அடையார் பஸ் ஸ்டாண்ட் தூர உயரத்துக்கு கோபுரம் அமைக்கிறாங்க. அப்படித்தானே..? - ஆமாம்... அப்புறம் இத கட்டுறதுக்கு 80000 டன் உலோகத்த யூஸ் பண்ணப் போறாங்களாம்...
- அடேங்கப்பா... - இத 2026க்குள்ள கட்டி முடிச்சிடுவாங்களாம்... - அவ்ளோ நாள் ஆகுமா... சரி இதெல்லாம் எதுக்காம்..? - இதென்னடா கேள்வி... இந்த ஸ்கோப் மூலமா சூரிய குடும்பத்தின் ஒன்பது கோள்களையும் தெளிவா பாக்கலாமாம்...
- என்ன..? - இந்த ஸ்கோப் மூலமா சூரிய குடும்பத்தின் ஒன்பது கோள்களையும் தெளிவா பாக்கலாமாம்... - முட்டாப் பயலுக...
என்னடா இப்படி சொல்லிட்ட..? - பின்ன... இதுக்கு ஏன் 5000 கோடி ரூபாவ செலவ பண்ணிட்டு... பேசாம ஒரு டிக்கெட்ட போட்டு பிள்ளையார்பட்டிக்கு வரவேண்டியதுதானே... - பிள்ளையார்பட்டிக்கு போயி..? - அதான் பாடி வச்சிருக்காங்களே... ‘ஒன்பது கோளையும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்’னு... - ....... - என்னடா மொறைக்கிற..? - ஒண்ணுமில்ல... - டேய்... எதுக்குடா செருப்பை எடுத்து உன்னை நீயே அடிச்சுக்கற..? டேய்... டேய்...l
பொம்மையா முருகன்
|