எனக்கு உடம்புல ஒரு பிரச்னை இருக்கு...



சார்...
சொல்லுப்பா...
எனக்கு உடம்புல ஒரு பிரச்னை இருக்கு... 
நான் டாக்டர் இல்லப்பா...

தெரியும் சார்... இருந்தாலும் உங்ககிட்ட சொன்னா ஒரு தீர்வு கிடைக்கும்ன்னு தோணுது சார்...
சரி சொல்லு. உனக்கு என்ன பிரச்னை..?

ரோட்ல சும்மா போறவன பிடிச்சி வெறித்தனமா ரெண்டு மிதி மிதிக்கணும் போலிருக்கு...
ஓ... மீதிய நானே சொல்றேன்... உடம்பெல்லாம் முறுக்கிட்டு முறுக்கிட்டு வருமே..?
ஆமா சார்..!

ஒரு கைப்பிடி விபூதிய அள்ளி அப்படியே நெத்தியில பூசிக்கத் தோணுமே..?
எக்ஸ்சாக்ட்லி சார்..!
திடீர்னு உடம்புல பத்து ஆள் பலம் வந்தது மாதிரி இருக்குமே..?
ஆமா சார்...

எவனாவது கெடச்சா அவன் மூஞ்சில பத்து கை விரல் நகத்தாலயும் பிராண்டி வைக்கணும்னு தோணுமே...

யெஸ் சார்..!

அப்புறம் யாரையாவது கழுத்தப் பிடிச்சி கடிச்சி வைக்கத் தோணுமே..?
ஐய்யோ... எல்லாத்தையும் சரியா சொல்றீங்க சார்... 

அப்புறம் எவன் காலையாவது பிடிச்சித் தூக்கி அப்படியே தட்டாமாலை சுத்தி வீசணும்னு தோணுமே...
கொன்னுட்டீங்க சார்...

அப்புறம் எதிரி வயித்துக்குள்ள கையை விட்டு குடல் குந்தானியையெல்லாம் வெளியே எடுத்து வீசணும்னு தோணுமே..?

தெய்வமே... நீங்க எங்கயோ போயிட்டீங்க..! நீங்க டாக்டர் இல்லனாலும் டாக்டர்தான்... நேர்ல பாத்த மாதிரியே சொல்றீங்களே சார்... இந்த வியாதி குணமாக நான் என்ன பண்ணணும் சார்..?
ஒண்ணும் பண்ண வேணாம். நீ ஆந்திரா மசாலா படங்களை... குறிப்பா பாலையா படங்களை பாக்காம இருந்தாலே போதும். ஆட்டோமேட்டிக்கா வியாதி சரியாயிடும்..!

பொம்மையா முருகன்