DIGIPIN தான் இனி நம் முகவரி!
அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட அஞ்சல் குறியீடு எனப்படும் பின்கோடுகளுக்கு பதில் டிஜிபின் (DIGIPIN) என்ற டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.  இந்தியாவில் 10 இலக்க எண்களுடன், 4 மீ X 4மீ பரப்பளவுக்கு குறிப்பிட்ட ஓர் இடத்தை, வழக்கமான பின்கோடுகளைப் போல அல்லாமல், துல்லியமாக அறிய உதவும் வகையில் இந்த டிஜிபின் செயல்படுகிறது.
ஒரு முகவரியை மிகவும் எளிமையாக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறையுடன், ஐஐடி-ஹைதராபாத் மற்றும் இஸ்ரோ இணைந்து, இந்த டிஜிபின் முறையை உருவாக்கியுள்ளன.
உங்களுக்கு ஒரு டிஜிபின் வேண்டும் என்றால், இந்திய அஞ்சல் துறையின் இணையதளம் வாயிலாகவே அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.இந்த 10 இலக்க எண்ணை மட்டும் கூகுள் மேப் போன்ற வரைபடத்தில் போட்டு தேடினால், சரியான முகவரி கிடைத்துவிடும்.
டிஜிபின் என்பது இந்தியாவுக்கு மட்டுமானது. இது நாடு முழுவதுக்கும் பயன்பாட்டுக்கு வர 2027 வரை ஆகலாம்.ஒரு கட்டடத்துக்கான அடையாளமாக மட்டுமே இது இருக்கும்.ஒரு கட்டடத்துக்குள் இருக்கும் பல்வேறு வீடுகள், அலுவலகங்களுக்குத் தனித்தனியாக டிஜிபின் பெற முடியாது.
காம்ஸ் பாப்பா
|