மியூசியமான வதை முகாம்!



சமீபத்தில் செக் குடியரசு நாட்டில் ஆஸ்கர் ஷிண்ட்லர் என்பவர் 1,200 யூதர்களைக் காப்பாற்றிய இடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. செக் குடியரசின் தலைநகரான பிராகாவிலிருந்து கிழக்கே சுமார் நூறு மைல் தொலைவில் உள்ளது பிரெனெக் நகரம். இங்கிருந்த ஜவுளித் தொழிற்சாலையை யூத மதத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வந்தார். இதனை 1938ம் ஆண்டு நாஜிப் படைகள் வசப்படுத்தி அதனை ஒரு வதை முகாமாக மாற்றினர்.

அப்போது நாஜிக் கட்சியைச் சேர்ந்த ஜெர்மன் தொழிலதிபர் ஆஸ்கர் ஷிண்ட்லர் என்பவர் இதிலிருந்து, 1,200 யூதர்களைக் காப்பாற்றினார். இதுவே பின்னாளில் புத்தகமாகவும், தொடர்ந்து இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின்‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படமாகி ஆஸ்கார் விருதும் வென்றது.

இந்நிலையில் இந்த ஜவுளித் தொழிற்சாலை புதுப்பிக்கப்பட்டு அதன் ஒருபகுதியில் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சியகம் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஷிண்ட்லர் மற்றும் அவர் மனைவி எமிலியின் வரலாறு, இவர்களுடன் தொடர்புடையவர்களின் வரலாறுகள், இன அழிப்பிலிருந்து தப்பியவர்கள் பற்றிய விவரங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பிகே