E Passportக்கு மாறலாம் வாங்க!
ஆமாம் சாமி... ஆமாம். பழைய பாஸ்போர்ட்களின் கதை விரைவில் முடியப் போகிறது.அதற்கான ஆரம்பமாக வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒட்டுமொத்த பழைய பாஸ்போர்ட் நடைமுறையை மாற்றும்படி சொல்லியதுடன் சிப்-பேஸ்டு ஈ-பாஸ்போர்ட்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. பயோமெட்ரிக் விவரங்கள் (Biometric Data), ஆர்எப்ஐடி டெக்னாலஜி (RFID Technology), பப்ளிக் கீ இன்பிராஸ்டிரக்சர் (Public Key Infrastructure) போன்றவற்றுடன் புதிய ஈ-பாஸ்போர்ட் கொடுக்கப்பட இருக்கின்றது.
 ரைட். இந்த ஈ-பாஸ்போர்ட்டின் முழு விவரங்களைத் தெரிந்து கொள்வோமா?ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் பயன்படுத்தலில் டிஜிட்டல் முறையை கொண்டு வருவதற்கு பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0-ஐ (Passport Seva Programme 2.0) கொண்டு வந்தது நினைவில் இருக்கிறதல்லவா? இந்தத் திட்டத்தின்படி ஆர்எப்ஐடி சிப் (RFID Chip) பேஸ்டு ஈ-பாஸ்போர்ட் அமல் செய்யப்பட்டிருக்கிறது.
 அதாவது, பழைய பாஸ்போர்ட்களில் பேப்பர் டாகுமென்ட்களாக இருக்கும் டேட்டாக்கள் ஒட்டுமொத்தமாக டிஜிட்டலுக்கு மாற இருக்கிறது. இதன் மூலம் டிஜிட்டல் முறையிலேயே வெரிஃபிகேஷன் இருக்கும். இதனால், பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு எடுத்து கொள்ளப்படும் நேரம் குறையும். அதே நேரத்தில் டிஜிட்டல் என்ஹான்ஸ்டு செக்யூரிட்டி உறுதி செய்யப்படும்.
ஈ-பாஸ்போர்ட் எப்படி வேலை செய்கிறது?
இந்தியாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்களில் என்னென்ன விவரங்கள் அடங்கி இருக்குமோ, அதை அப்படியே டிஜிட்டலாக மாற்றி அதை சிப் மூலம் பதிவு செய்து கொள்வதை இந்த ஈ-பாஸ்போர்ட் உறுதி செய்கிறது. இதற்காக ரேடியோ ஃபிரிகொன்சி ஐடென்டிஃபிகேஷன் (Radio Frequency Identification) டெக்னாலஜி அடங்கிய சிப் பொருத்தப்படுகிறது.
இந்த ரேடியோ ஃபிரிகொன்சி ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜியானது, டிஜிட்டல் டேட்டாவை டிரான்ஸ்ஃபர் செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இதில் ஆண்டெனா (Antenna) சப்போர்ட் இருக்கும். இதன் மூலம் டேட்டா டிரான்ஸ்மிஷன் நடக்கும். இந்த டெக்னாலஜிக்கு என்கிரிப்ஷன் (Encryption) சப்போர்ட் இருக்கிறது. எனவே, டேட்டாவை எளிதாக மாற்ற முடியாது.
ஸோ, இதில் கொடுக்கப்பட்ட பர்சனல் டேட்டா மற்றும் பயோமெட்ரிக் டேட்டாக்கள் என்கிரிப்ஷன் செய்யப்பட்டுவிடும். இதனால், பழைய பாஸ்போர்ட்களைவிட அதிக பாதுகாப்பானதாக ஈ-பாஸ்போர்ட்கள் இருக்கும் என்கிறார்கள். ஒரு சிறிய கோல்டு குறியிட்டுடன் இந்த ஈ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதை வைத்து அடையாளம் காணலாம்.
ஈ-பாஸ்போர்ட் எப்படி பயன்படுகிறது?
இந்த புதிய ஈ-பாஸ்போர்ட் மூலம் இமிகிரேஷன் விரைவாக செய்து முடிக்கப்படும். அதே நேரத்தில் குடிவரவு அதிகாரிகள் இதை வைத்து எளிதாக அங்கீகரித்துக் கொள்ளலாம். மேலும், டேட்டாவும் டிஜிட்டலாக என்கிரிப்ட் செய்யப்பட்டிருப்பதால், இது கூடுதல் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
பப்ளிக் கீ இன்ஃபிராஸ்டிரக்சர் மூலம் இந்த டிஜிட்டல் டேட்டாக்கள் கட்டுப்படுத்தப்படுவதால், அங்கீகரிக்கப்படாத என்டிட்டி மூலமாக இதை அனுகவோ அல்லது மாற்றவோ முடியாது. சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் உரிமையாளர் மட்டுமே அதிகார பூர்வமான பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு சென்று மாற்ற முடியும். இந்த ப்ராசஸ் இப்போது, ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், 13 நகரங்களில் மட்டுமே அமல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், அமிர்தசரஸ், புவனேஸ்வர், தில்லி, கோவா, ஜெய்ப்பூர், ஜம்மு, நாக்பூர், ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில் இருக்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய பாஸ்போர்ட் வாங்குவோருக்கு ஈ-பாஸ்போர்ட்டே கொடுக்கப்படும்.
பழைய பாஸ்போர்ட்களையும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஈ-பாஸ்போர்ட்டாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கு உங்களது டேட்டாவை மட்டுமே டிஜிட்டல் செய்ய வேண்டி இருக்கும். மொத்தத்தில் பழைய பாஸ்போர்ட் வைத்திருப்போர் படிப்படியாகவே ஈ-பாஸ்போர்ட்டுக்கு மாற்றப்பட இருக்கின்றனர்.
என்.ஆனந்தி
|