இந்தியாவின் 7 சம்மர் கூல் ஸ்பாட்கள்!



இந்தியாவுக்கு இது கோடைக்காலம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெய்யில் பலரின் மண்டையைப் பிளக்கிறது. அந்த வெய்யிலும் 30 டிகிரி செல்சியஸ் முதல், 35 டிகிரி வரை எகிறி அடிக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்நேரத்தில் ஏசி மாதிரியான கூலான இடங்கள் எவை என கூகுள் ஆண்டவரைக் கேட்டோம். அதில் கொட்டியதுதான் இந்த குளுகுளு பனி நீர். 7 இடங்களை கூகுள் சுட்டிக் காட்ட அவற்றை பட்டியலிட்டோம்.

*ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் இருக்கும் ‘லே’ (Leh). இங்கு 8லிருந்து 12 டிகிரி செல்சியஸ் வெய்யில்தான். கூல் என்றால் செம கூல். ஷாம் பள்ளத்தாக்கு (Sham Valley). ட்ரெக்கிங் எல்லாம் இங்கே பிரபலம்.

*அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் டவாங்க் (Tawang). 12லிருந்து 16 வரைதான் வெய்யில். புத்த மடாலயங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ட்ரெக்கிங்குக்கு பிரபலம்

*இதுவும் ஜம்மு காஷ்மீர் இடம்தான். அது குல்மார்க் (Gulmarg). 9லிருந்து 15 வரைதான் வெயில். செம கூல். மலைகளைப் பார்த்து ரசிக்க நிறைய இடம் உண்டு. பணக்காரர்கள் சரக்கு அடிக்கிறார்கள் என்றால் நம்மைப்போல மிக்சர், ஊறுகாயை எல்லாம் வாய்க்குள் திணிப்பதில்லை. சீஸ்தான். 
இங்கேயும் குளிரை விரட்டி அடிக்க வாயில் சீஸைத் திணிக்கிறார்கள். காரணம், இந்த இடத்தில் பல சீஸ் ஃபேக்டரிகள் இருப்பது. இது தவிர சீஸ் காட்டேஜ் என்றும் தங்குமிடங்கள் உண்டு. சீஸ் கிடைத்ததற்குப் பிறகு என்ன வேண்டும்? அதேதான்!

*மேகாலயாவில் உள்ள ஷில்லாங் (Shillong). ஏரி, நிர்வீழ்ச்சி, பூந்தோட்டம் எல்லாம் பிரபலம்.

*இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு (Spiti Valley). 9லிருந்து 16 வரைதான் வெய்யில். புத்த மடாலயங்களுக்கு பிரபலம்

*சிக்கிமில் உள்ள கேங்டாக் (Gangtok). 14லிருந்து 24 வரைதான் வெய்யில். ஏரி, நீர்வீழ்ச்சி, ட்ரெக்கிங் பிரபலம். பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்து வாய் பிளந்த கஞ்சன்ஜங்கா மலை இங்கேதான் உள்ளது.

*உத்தரகாண்டில் இருக்கும் லாந்தூர் (Landour). முசுறியில் இருக்கும் மலைகளின் அரசிக்கு பக்கத்தில் இருக்கிறது இந்த லாந்தூர். 18லிருந்து 25 வரைதான்
வெய்யில்.

எவ்வளவு செலவாகும், எத்தனை பேர் போகலாம், எந்த வாகனத்தில் பயணிக்கலாம் என்பவர்களுக்கு எல்லாம் வேண்டிய தகவல்களை கூகுள் ஆண்டவர் புட்டுப் புட்டு வைக்கிறார்.ரீல் பார்க்கும் நேரத்தில் போனை நோண்டினாலே எல்லா தகவல்களும் கிடைக்கும். ஆன்லைனிலும் புக் செய்துகொள்ளலாம். பிறகு என்ன... கூல் பேபி கூல்!

டி.ரஞ்சித்