பாயும் சிம்பு!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவும் ஒரு ஹீரோ. கமல்ஹாசன் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஜூன் மாதம் ‘தக் லைஃப்’ வெளியாக உள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ வெற்றிக்குப் பின் மணிரத்னம் இயக்கும் படம் என்பதால், படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. படமும் பல கோடிக்கு பிஸினஸ் பேசப்படுகிறது. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக உள்ளதால் சிம்பு ஹேப்பி.
 அடுத்ததாக, ‘பார்க்கிங்’ கொடுத்த ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கப்போகிறார். இந்த ஆண்டே இப்படம் ரிலீஸ். இது, சிம்புவின் 49வது படம்.
சிம்பு நடிக்கும் 50வது படத்தை பெரிய பட்ஜெட்டில் தேசிங் பெரியசாமி இயக்கப்போகிறார்.
சிம்புவின் 51வது படத்தை ‘டிராகன்’ வெற்றிப் படத்தைக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். ஆக, இன்னும் 2, 3 ஆண்டுகளுக்கு சிம்பு பிஸி. இதற்கிடையே, தானே இயக்கி, நடிக்கும் ஒரு படத்தை சிம்பு இயக்க தயாராகி வருகிறாராம். ‘மாநாடு 2’, ‘மன்மதன் 2’ போன்ற கதைகளும் சிம்பு லிஸ்ட்டில் இருக்கிறதாம். ரைட்... ரைட்!
காம்ஸ் பாப்பா
|