7 கண்டங்களின் உயரத்தைத் தொட்ட 17 வயது மாணவி!



ஏழு கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் ஏறிய இளம் மலையேற்ற வீராங்கனை என்ற சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறார் காம்யா. தந்தை கார்த்திகேயனின் துணையுடன் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். 
அண்டார்க்டிகாவில் உள்ள வின்சென்ட் மலை, ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ, ஆசியாவின் எவரெஸ்ட், ஐரோப்பாவில் உள்ள எல்ப்ரஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள கோசியஸ்கோ, தென் அமெரிக்காவில் உள்ள அகோன்காக்வா, வட அமெரிக்காவில் உள்ள டெனாலி ஆகிய சிகரங்களில் கால் பதித்திருக்கிறார் காம்யா.

இத்தனைக்கும் மும்பையில் உள்ள நேவி சில்ரன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் காம்யா. தனது 10 வயதில், அதாவது 2017ம் வருடம் அக்டோபர் மாதத்தில் கிளிமஞ்சாரோவில் ஏறி, தனது சாகசப் பயணத்தை ஆரம்பித்த காம்யா, கடந்த டிசம்பர் 24ம் தேதி அண்டார்க்டிகாவில் உள்ள வின்சென்ட் மலையில் ஏறி சாதனையை நிறைவு செய்தார்.
இப்போது காம்யாவின் வயது 17.

த.சக்திவேல்