இந்தியாவில் ஒலிம்பிக்?
அடுத்த 2028ல் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் நடக்கவுள்ளன. இதன்பின்னர் 2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஆஸ்திரேலியா நடத்துகிறது.
இந்நிலையில் 2036ம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதில் ஆர்வம் தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (IOC) தனது விருப்பக் கடிதத்தை இந்தியா சமர்ப்பித்துள்ளது. இது வரலாற்றில் முதல்முறையாகும்.
ஏனெனில், இந்தியா கடைசியாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை 2010ல் புது தில்லியில் நடத்தியது. அதுவே இந்தியா நடத்திய சர்வதேச அளவிலான பெரிய விளை
யாட்டுப் போட்டியாகும்.இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக அகமதாபாத் நகரை ஃபோகஸ் செய்துள்ளது.
இருந்தாலும் ஹாக்கிக்கு புவனேஸ்வர், படகுப் போட்டிகளுக்கு போபால், கயாகிங் போட்டிக்கு புனே எனப் பல்வேறு போட்டிகளுக்கு பல நகரங்களையும் பரிசீலித்து வருகிறது. ஆனால், ஒலிம்பிக்கை நடத்தும் போட்டியில் மெக்சிகோ, போலந்து, எகிப்து, தென்கொரியா, சவுதி அரேபியா, இந்தோனேசியா, சிலி, துருக்கி போன்ற நாடுகளும் களத்தில் உள்ளன. இதில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பி.கே
|