பிளாஸ்டிக் குப்பையைக் கொடுத்தால் உணவு கிடைக்கும்!
சட்டீஸ்கரில் உள்ள அம்பிகாபூரில் அமைந்திருக்கும் உணவகத்தைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக்.
அங்கே என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?
கையில் காசு இல்லாவிட்டாலும் கூட அங்கே சாப்பிட முடியும். ஆனால், பணத்துக்குப் பதிலாக பிளாஸ்டிக் குப்பைகளைத் தர வேண்டும். அரை கிலோ பிளாஸ்டிக் குப்பைகளுக்குக் காலை உணவையும், ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைகளுக்கு மதிய உணவையும் வழங்குகிறது இந்த உணவகம்.
‘கார்பேஜ் கஃபே’ என்றே இதனை அழைக்கின்றனர். பிளாஸ்டிக் குப்பைகளுக்குப் பதிலாக உணவை வழங்கும் இந்தியாவின் முதல் உணவகம் இதுதான். பிளாஸ்டிக் குப்பைகளை அழிக்க வேண்டும் மற்றும் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதே இந்த உணவகத்தின் முக்கிய நோக்கம். பணம் கொடுத்தும் இங்கே சாப்பிட முடியும்.
அதுவும் கூட மிகக்குறைந்த விலையில் தரமான உணவைத் தருகின்றனர். இன்றைய தேதியில் இந்தியாவின் தூய்மையான நகரங்களில் ஒன்றாக இருக்கிறது, அம்பிகாபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|