ஒளியிலே... தெரிவது...
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒவ்வொரு வருட இறுதியிலும் தனக்குப் பிடித்த புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் இசை குறித்து ஒரு பட்டியல் வெளியிடுவார். பல வருடங்களாக இதைத் தொடர்ந்து செய்து வருகிறார். சர்வதேச அளவில் இந்தப் பட்டியல் பெரிதும் கவனம் பெறும் ஒன்று.இந்த வருடம் திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்திலேயே பாயல் கபாடியாவின் ‘All We Imagine as Light’ இடம் பிடித்திருக்கிறது.அனேகமாக ஒபாமாவின் பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்தியப் படம் இதுவாகத்தான் இருக்கும். பெருநகர வாழ்வின் கருணையின்மைக்கும் இரைச்சலுக்கும் இடையே ஒருவருக்கு ஒருவர் கொள்ளும் சின்னஞ்சிறு கரிசனத்தை இறுகப்பற்றிக் கொள்ளும் பெண்களின் கதை
கான் திரைப்பட விழாவில் இந்த வருடத்திற்கான ‘கிராண்ட் ப்ரீ’ விருதை இப்படம் வென்றது.
பாயல் கபாடியா இந்த விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையையும் அடைந்தார். விருதுகள் ஒரு பக்கம் என்றாலும் இது போன்ற பரிந்துரைகள் ஒரு படைப்புக்கு கூடுதல் கவனம் அளிப்பவை.
ஒபாமாவின் பட்டியலில் இடம்பிடித்த பல புத்தகங்களின் விற்பனை உடனடியாக எகிறியிருக்கிறதுஎன்பதை நாம் மறந்துவிடக் கூடாது.ஒபாமா என்றில்லாமல் பரவலாகவே இந்தப்படம் சர்வதேச கவனத்தையும், விமர்சகர்களின் நன்மதிப்பையும் பெற்று வருகிறது.பாயல் கபாடியாவுக்கு வாழ்த்துகள்.
கார்த்திக் வேலு
|