மனித ட்ரோன்
வான்வழி கண்காணிப்புக்கு உறுதுணையாக இருக்கும் சாதனம், ட்ரோன். மனிதர்கள் பயணிக்கும் வகையில் நவீனமான ட்ரோனை வடிவமைத்திருக்கிறார் மேதன்ஷ் திரிவேடி.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மேதன்ஷ், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலிருந்தே சீனாவின் ட்ரோன்கள் மீது தீவிர ஆர்வத்துடன் இருந்தார், மேதன்ஷ். சீன தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி, மனோஜ் மிஸ்ரா என்ற தனது வகுப்பு ஆசிரியரின் வழிகாட்டலில் இந்த ட்ரோனை உருவாக்கியிருக்கிறார்.இதில் அதிகபட்சம் 80 கிலோ எடைகொண்ட ஒருவர் பயணிக்க முடியும்.
45 குதிரைத்திறன் கொண்ட இந்த ட்ரோன், 60 கிமீ வேகத்தில், தொடர்ந்து 6 நிமிடம் வரைக்கும் பறக்கும். பாதுகாப்பின் நிமித்தமாக 10 மீட்டர் உயரத்தில் மட்டுமே பறக்கவிட்டு, பரிசோதனை செய்திருக்கிறார் மேதன்ஷ். 1.8 மீட்டர் நீளம் கொண்ட இந்த ட்ரோனின் விலை ரூ.3.5 லட்சம். மேதன்ஷின் இந்தப் புதிய கண்டு பிடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
த.சக்திவேல்
|