டிசம்பரும், ராஷ்மிகாவும், சென்னையும்!



யெஸ். டிசம்பர் மாதம் என்றால் மார்கழி மட்டுமல்ல... ராஷ்மிகா மந்தனா காட்டில் அடை மழையும் கூட! அப்படித்தான் நேஷனல் மீடியாஸ் கிசுகிசுகின்றன.காரணம், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ‘அனிமல்’ இந்திப் படம், இந்தியாவையே ரவுண்டு கட்டி அடித்து கல்லா கட்டியது.
இந்த ஆண்டு ‘புஷ்பா 2’ ரிக்கார்ட் பிரேக் கலெக்‌ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது!அதனால்தான் இவர் நேஷனல் க்ரஷ்... அதனால்தான் இந்தியாவில் எங்கு இவர் சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொள்கிறது.

போதும்போதாததற்கு 2025ம் ஆண்டு இவர் நடித்த அல்லது இவரும் நடித்த மகா பட்ஜெட் படங்களும், கதையின் நாயகியாக இவர் உலா வரும் படங்களும் ரிலீசாகப் போகின்றன,
முதலாவதற்கு உதாரணம், சல்மான் கானுடன் இவர் நடித்திருக்கும் ‘சிக்கந்தர்’. 
இரண்டாவதற்கு எடுத்துக்காட்டு, ‘கேர்ள் ஃப்ரெண்ட்’.இந்நிலையில்தான் தமிழகத்தின் தலைநகரான சென்னை ராஜிவ்காந்தி சாலை எனப்படும் ஓஎம்ஆர் சாலையில் உலகத்தர வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் உள்ள ஃப்ளாட்டை வாங்கப் போகிறார் என பேச்சு அடிபடுகிறது.

இதற்கு ஏற்ப கடந்த சில நாட்களாக சென்னையை மையம் கொண்டு ராஷ்மிகா சுற்றி வந்ததை இந்த ‘வதந்தி’யுடன் முடிச்சுப் போட்டு சத்தியம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் ராஷ்மிகா தற்போது சென்னையில் உள்ளாரா, இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கப் போகிறாரா, சென்னையில் புதியதொரு அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கவுள்ளாரா... என அடுக்கடுக்காக நீளும் வினாக்களுக்கு காலம்தான் பதில் சொல்லும்.

காம்ஸ் பாப்பா