வேண்டாம் எதிர்மறை எண்ணங்கள்!
“ஆரம்பத்தில் நான் இசையமைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் ராசியில்லாதவன் என்றார்கள். தனி அறையில் அமர்ந்து, கதவைப் பூட்டி அழுதேன். சில நாட்கள் கழிந்தன. மீண்டும் இசையமைக்கத் துவங்கினேன். இப்படித்தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். பேசுகிற வாய் பேசிக்கொண்டேதான் இருக்கும், நாம் நடந்துகொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சிக்கும். நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது. உங்கள் தலை நிமிர்ந்தபடி எல்லாவற்றையும் கடந்து வரவேண்டும்.
இதனால்தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிகிறது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும்...’’- சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசியது.
காம்ஸ் பாப்பா
|