அபேஸ் இலியானா!
பழம்பெரும் நடிகைகளின் லிஸ்ட்டில் இடம்பெற்றுவிட்ட இலியானா குறித்துதான் இப்பொழுது தெலுங்கில் ஹாட் டாக்.காரணம், சம்பளப் பணத்தை அபேஸ் செய்தார் என்ற குற்றச்சாட்டு! இத்தனைக்கும் இப்படி இலியானா பெப்பே காட்டியது டோலிவுட்டில் இல்லையாம்... கோலிவுட்டிலாம்!யெஸ். தமிழ்ப் படத் தயாரிப்பாளரை இலியானா ஏமாற்றிவிட்டார் என்பதுதான் தெலுங்கில் சுடச்சுட விவாதிக்கப்பட்டு வருகிறது!
‘கேடி’ என்னும் தமிழ்ப் படம் வழியாக ஹீரோயினாக அறிமுகமான இலியானாவுக்கு அவரது இடுப்புதான் மிகப்பெரிய அடையாளமானது. இதன் காரணமாகவே இடுப்பழகி இலியானா என்ற பெயரையும் பெற்றார்.போதாதா... ‘கேடி’ பப்படமாக ஊத்திக் கொண்டாலும் தெலுங்கு தேசம் அவரை இருகரம் கூப்பி வரவேற்றது.
மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், ரவிதேஜா... என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார் அல்லது தலையைக் காட்டினார். என்றாலும் மறக்காமல், தான் நடிக்கும் படங்களில் குறைந்தது இரு பாடல்களிலாவது தனது இடுப்பையும் தொப்புளையும் காண்பித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.இதற்கு பலனும் கிடைத்தது. அறுவடையும் அமோகமாக விளைந்தது. பின்னர் ஒரு சுபமுகூர்த்த நாளில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார்.இச்சூழலில்தான் தமிழ்த் தயாரிப்பாளர் ஒருவர் இலியானாவைத் தொடர்பு கொண்டு பெரும் தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து புக் செய்தாராம்.பணத்தை வாங்கிக் கொண்ட இலியானா, ஃபீல்ட் அவுட் ஆகி திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இந்த நொடி வரை கால்ஷீட்டும் தரவில்லையாம்; வாங்கிய அட்வான்ஸை திருப்பியும் தரவில்லையாம்!
இச்செய்தியை ஆந்திர மீடியாவில் கொளுத்திப் போட்டிருப்பவர் அங்கு மூத்த தயாரிப்பாளராகத் திகழும் காந்தகட்ட பிரசாத்! ஆனால், அந்தத் தமிழ் தயாரிப்பாளர் யார் என்று மட்டும் அவர் சொல்லவில்லை.லட்டுக்கு சமமாக இலி மேட்டர் அங்கு வைரல்!
காம்ஸ் பாப்பா
|