50 Kg தாஜ்மகால் கர்ப்பம்?



அதை ஏன் கேட்கிறீர்கள்... அப்படித்தான் செய்திகள் பரவி வருகின்றன. வைரலாகி நொடிக்கு நொடி விஷயம் கண்சிமிட்டுகிறது.வேறொன்றுமில்லை. ‘உலக அழகி’ ஐஸ்வர்யாராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்பதுதான் நியூஸ்.தலையைப் பிய்த்துக் கொள்ளாததுதான் குறை. 
இரு ஆண்டுகள் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனுடன் டேட்டிங்கில் இருந்த ஐஸ்வர்யாராய், பிறகு உலகமே மெச்சும் வகையில் அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகிழ்ச்சிக்கு அடையாளமாக ‘ஆராத்யா’ என்ற மகளும் பிறந்தார். இப்பொழுது ஆராத்யாவுக்கு வயது 13.

இந்நிலையில்தான் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் லடாய்... இருவரும் விவாகரத்து செய்யப் போகின்றனர்... என செய்தி இறக்கைகட்டி பறந்தது; பறக்கிறது.
யெஸ். இப்பொழுதும் டைவர்ஸ் நியூஸ் ஹாட்டாகத்தான் இருக்கிறது.இச்சூழலில்தான் இந்த இரண்டாவது முறை கர்ப்பம் வைரலாகி வருகிறது.எது நிஜம்... எது கப்சா? யாருக்குத் தெரியும்?நமக்கு ஒரு பக்க மேட்டர் கிடைத்தது. அது மட்டுமே லாபம்!

காம்ஸ் பாப்பா