இந்த சேண்ட்விச் பேக்கின் விலை ரூ.2.80 லட்சம்!
சமீபத்தில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோவில் தோலினால் செய்யப்பட்ட சேண்ட்விச் பேக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது ‘லூயி விட்டோன்’. பிரபல ஷோரூம்களில் துணிகளை வாங்கும்போது, பத்து ரூபாய்க்கு கொடுக்கப்படும் பேப்பர் பேக்கை போல காட்சியளிக்கிறது ‘லூயி விட்டோனி’ன் சேண்ட்விச் பேக்.  பரேல் வில்லியம்ஸ் என்பவர் இந்த பேக்கை வடிவமைத்திருக்கிறார். கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் விற்பனைக்கு வந்திருக்கிறது இந்த சேண்ட்விச் பேக். இதன் நீளம் 30 செ.மீ, உயரம் 27 செ.மீ, அகலம் 17 செ.மீ. விஷயம் இதுவல்ல. இந்த சேண்ட்விச் பேக்கின் விலை 2.80 லட்ச ரூபாய். ‘‘இந்தப் பேக்கை வாங்குவதற்கான பணத்தை வைத்து வாழ் நாள் முழுவதும் சேண்ட்விச் சாப்பிடலாம்...’’ என்று ‘லூயி விட்டோனை’க் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இன்னொரு பக்கம் இந்தப் பேக்கிற்கான ஆர்டர்களும் குவிந்து வருகின்றன.
த.சக்திவேல்
|