நாய்களுக்கு க்யூ ஆர் கோட்!



இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எல்லோருக்கும் கியூ ஆர் கோட் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். கூகுள் பே மூலமாக பணம் செலுத்தவோ அல்லது திரையரங்குக்குள் நுழைவதற்கான டிக்கெட்டை பரிசோதிக்கும்போதோ கண்டிப்பாக க்யூ ஆர் கோடை பயன்படுத்தியிருப்பார்கள்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த எஞ்சினியரான அக்‌ஷய ரித்லன் என்ற இளைஞர் தெரு நாய்களுக்காக பிரத்யேகமாக க்யூ ஆர் கோடுகளை வடிவமைத்திருக்கிறார். நாய்களின் மீதான தீராத காதலால் இதை அவர் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த க்யூ ஆர் கோடை நாயின் கழுத்தில் மாட்டிவிட்டால் போதும். ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியான க்யூ ஆர் கோட் இருக்கும். அந்த கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் நாயின் பெயர், அதன் எஜமானரின் பெயர், அவரது அலைபேசி எண், நாய்க்கு தடுப்பூசி போடப்பட்ட மருத்துவ விவரம் என நாயைப் பற்றிய பயோடேட்டாவே அதில் இருக்கும். வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கும் இந்த க்யூ ஆர் கோடை வடிவமைத்துத் தருகிறார் அக்‌ஷய். இதற்காக குறிப்பிட்ட ஒரு தொகையை வசூலிக்கிறார்.

த.சக்திவேல்