பசித்து புசி!



*பசிக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்துக்குள் உண்ணத்தொடங்கிவிட வேண்டும். தள்ளிப் போட்டால் காலக்கிரமத்தில் அல்சர் வரும்.

*அரிசி ரகங்களில் சீரக சம்பா தவிர மற்றவை அத்தனை தரமில்லை.

*கிழங்கு வகையில் கருணைக்கிழங்கு தவிர வேறெதுவும் வேண்டாம்.

*உணவோடு பழங்கள் சாப்பிட்டால் செரிமானப் பிரச்னை வரும்.

*காய்கறி சமைக்கும்போது புளியும் மிளகாயும் எவ்வளவு குறைவாகச் சேர்க்கிறோமோ, அவ்வளவு நல்லது.

*மிளகாயைத் தவிர்ப்பது உத்தமம். மிளகு சிறப்பு.

*கடுகு தாளிப்பு இல்லாதிருந்தால் விசேஷம்.

*தாளித்தே தீரவேண்டுமென்றால் பசுநெய்யில் தாளிக்கலாம்.

*எதற்கு தாளித்தாலும் இரண்டு பல் வெங்காயம், பூண்டு சேர்ப்பது நல்லது.

- 19ம் நூற்றாண்டில் வள்ளலார் எழுதிய உணவுக் குறிப்புகள்.