அமலா சாமியார்?!



சர்ச்சைகள் வழியே பிரபலமான நடிகை அமலா பால், தன் சமூக வலைத்தளத்தில் படு க்ளாமர் படங்களை அவ்வப்போது வெளியிட்டு தெறிக்க விடுவார். இதனால் கைவசம் படங்கள் இருக்கிறதோ இல்லையோ, எப்பொழுதும் லைம் லைட்டில் இருப்பார்.

அப்படிப்பட்டவர் இப்பொழுது ஆன்மிகம் பக்கம் பார்வையைத் திருப்பியிருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.யெஸ். இந்தோனேஷியாவில் உள்ள பாலித் தீவுக்குச் சென்றுள்ள அமலா பால், அங்குள்ள Pyramids Of Chi என்கிற ஆசிரமம் போன்ற ஒரு விடுதியில் தங்கியுள்ளார்.

இந்த விடுதியின் ஸ்பெஷல் பேக்கேஜ்தான். தியானம், வழிபாடு, யோகம், போதனை உள்ளிட்ட பல பயிற்சிகள் இந்த பேக்கேஜில் அடங்கும். அங்கு தங்கும்வரை உணவு உள்ளிட்ட அனைத்துமே அவர்கள் தருவதுதான். இப்படிப்பட்ட இடத்தில் தங்கியுள்ள அமலா பால் இந்தியா திரும்பியதும் ஆன்மிகப் பாதையைத் தேர்வு செய்வார் என்கிறார்கள்.இதுவும் ஸ்டண்ட்டா அல்லது உண்மையிலேயே ஆன்மிகமா என்பது போகப் போகத் தெரியும்!

காம்ஸ் பாப்பா