ரீவைண்ட் 2022- ஃபேஷன் டிரெண் டிங்
 கல்யாண மார்க்கெட் ‘‘இந்த வருடம் பெரும்பாலும் கல்யாண மார்க்கெட்தான் டிரெண்டிங். போலவே மீண்டும் கிளாசிக் ரிட்டர்ன்ஸ் அதிகமா இருந்துச்சு. கொரோனாவுக்கு முன்னாடி வரையிலும் மிகச் சில வருடங்கள் மட்டும் இந்த பீச், பெய்ஜ், பேஸ்டல், வெளிர் நிறங்கள் நிறைய இருந்துச்சு. ஆனா, ரொம்ப நாள் நிக்கல. இந்த வருஷம் பேக் டூ கிளாசிக். திரும்பவும் சிவப்பு, அரக்கு, மெரூன்... இப்படியான கிளாசிக் திருமண நிறங்களை அதிகமாகவே பயன்படுத்தினாங்க. மேலும் புடவை, தாவணி, குர்தா... இப்படி இந்திய அடிப்படையிலான உடைகளுக்கு நிறையவே பெண்கள் டிக் செய்திருந்தாங்க.
 ஆண்களும் ஷெர்வானி, பிளேசர்கள்னு இல்லாம வேஷ்டி சட்டை, அதிகபட்சம் சூட் எனவும் பயன்படுத்தினாங்க...’’ உற்சாகமாக சொல்லும் செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் அண்ட் டிசைனரான விக்கி கபூர், ‘‘குறிப்பா இந்த வருடத்தின் பெரிய மாற்றம் ஆண்கள் பாணியிலே பெண்கள் நீலம், கருப்பு, டிசைன்கள் இல்லாத பிளைன் உடைகள், கோடுகள், கட்டங்கள்னு தேர்வு செய்ததுதான்’’ என்கிறார்.
 ‘‘‘பீஸ்ட்’ விஜய் கொடுத்த டிரெண்டால் பசங்க ஃபுளோரல், பளிச் கலர்கள்லயும் சுத்தினாங்க. நயன்தாரா, ஹன்சிகா, திருமண உடைகளின் சிவப்பு நிறங்கள், ‘பொன்னியின் செல்வன் - 1’ படத்தின் தாக்கம் இதெல்லாம் கூட பிரைடல் டிரெண்ட் தாக்கமா சொல்லலாம்...’’ என்கிறார் விக்கி கபூர்.
 ஃபேஷன் நிகழ்ச்சிகள்
‘‘கொரோனாவுக்குப் பிறகு ரேம்ப் வாக் நிகழ்ச்சிகள் முழுமையாகவே குறைஞ்சிடுச்சு. அதைக் காட்டிலும் பியூட்டி டைட்டில்களுக்கான போட்டிகள் நிறையவே நடந்துச்சு...’’ என்கிறார் ரேம்ப்வாக் நிகழ்ச்சிகள், மற்றும் பியூட்டி போட்டிகளுக்கான இயக்குநரான சஃபி பெர்ரி.‘‘காரணம், ரேம்ப் வாக், ஃபேஷன் ஷோக்களுக்கு ஒரு கணிசமான தொகை செலவு செய்யணும். அதே பியூட்டி பேஜன்ட், டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சிகளுக்கு நமக்கு வருவாய் கிைடக்கும். கலந்துக்கறதுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தாகணும்.
 ரேம்ப் வாக் போறப்ப ஏற்கனவே மாடல்களா இருக்கவங்க மட்டும்தான் அதிலே கலந்துக்க முடியும். அழகுப் போட்டிகள்ல புது மாடல்கள் தங்களுடைய திறமையைக் காட்டி டைட்டில், கிரவுன்கள்னு ஜெயிக்கலாம். இதனால யார் வேணும்னாலும் மாடல் ஆகலாம் என்கிற போக்கு அதிகரிச்சிருக்கு. ஒரு காலத்துல புது உடைகள், தீம் எல்லாமே ஃபேஷன் நிகழ்ச்சிகள்லதான் அறிமுகமாகும். அதை அடுத்து இளைஞர்கள் பயன்படுத்துவாங்க.
 ஆனா, இப்ப ஒருத்தங்க பயன்படுத்தறதை, அவங்க சொல்றதை, நாம செய்யவே கூடாதுங்கற மனநிலை உருவாகியிருக்கு. ஒவ்வொருத்தரும் ஒரு தனி உலகமா, அவங்களுக்குன்னு ஒரு ஸ்டைலை பயன்படுத்தத் தொடங்கிட்டாங்க. முன்னாடி மிஸ். சென்னை மட்டுமே இருந்துச்சு. இப்ப மிஸ்.மதுரை, மிஸ்.திருச்சின்னு நடக்க ஆரம்பிச்சிருக்கு...’’ என்கிறார் சஃபி பெர்ரி.
ஃபேஷன் மார்க்கெட்
‘‘இனிமே சமூக வலைத்தள இன் ஃபுளூயன்சர்கள்தான் ரியல் மாடல்கள்...’’ என்கிறார் ஃபேஷன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் நிர்வாகியுமான ஜோ மைக்கேல்.‘‘கொரோனா நேரத்துல கடைக்குப் போயி, தொட்டுப் பார்த்து ஷாப்பிங் செய்யக் கூடிய அனுபவம் கிடைக்கல. அப்ப நாம வாங்கற பொருள் தரமா இருக்கான்னு பார்க்கணும்னா சமூக வலைத்தளம்தான் ஒரே வழி. குறைஞ்சபட்சம் ‘லைவ் டெமோ’ இங்க கிடைக்குது.
‘ஹியூமன் பேனர்ஸ்’... அதாவது மனிதர்களே பேனர்களா இருக்கற டிரெண்ட் இது. மாடல்கள் போட்டு நிற்கறதைப் பார்த்து வாங்கறதை விட ஏற்கனவே ஒரு நபர் வாங்கி போட்டுக் காண்பிச்சு, நாம பயன்படுத்தற மொபைல்ல அது எப்படி இருக்கும்னு காட்ட ஒருத்தர் தேவை. மக்களுக்கு விளம்பரங்கள் வேண்டாம். அவங்கள்ல ஒருத்தர் மக்கள் பிரதிநிதியா அதைப் பயன்படுத்தி சொல்ற விமர்சனங்கள்தான் தேவை என்கிற போக்கு இப்ப பெருகியிருக்கு...’’ என்கிறார் ஜோ மைக்கேல்.
காஸ்மெட்டிக்ஸ், மேக்கப்
‘‘ஸ்கின் புராடக்ட்ஸ் பிரம்மாண்டமான மார்க் கெட்களை உருவாக்கியிருக்கு. மேக்கப் ஐட்டங்களான லிப்ஸ்டிக், ஐலைனர், ஃபவுண்டேஷன் இதெல்லாம் குறைவுதான். ரெண்டு வருஷங்கள் கொரோனா தாக்கத்தால் வாங்கி வெச்ச மேக்கப் ஐட்டங்களே பயனில்லாம கிடந்ததால் மக்கள் பணத்தை ஆரோக்கியமான, பளிச் சருமங்களுக்கு செலவிட ஆரம்பிச்சிட்டாங்க...’’ என்கிறார் செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஸ்டைலிஸ்ட்டான ரம்யா அழகேந்திரன்.
‘‘மேக்கப்பைப் பொறுத்தவரை பிரைடல் அதிகமா இருந்துச்சு. பிரைடல் கூட கிளாசிக் லுக்தான். ‘பொன்னியின் செல்வன் - 1’ படம் அடிக்கும் ஐஷேடோக்களோ, மேட்ச்சிங்கான ஐலைனரோ வேண்டாம்... நேச்சுரல் மேக்கப், அதனுடன் கிளாசிக் மெரூன், சிவப்பு, பச்சை, மஞ்சள் உடைகள் போதும் என்கிற நிலையை உருவாக்கியிருக்கு.
மாமாஎர்த், பிளம், எம்கஃப்பீன் மாதிரியான புது காஸ்மெட்டிக் புராடக்ட்களுக்கு மவுசு கூடியிருக்கு. நேச்சுரலான வீட்டுப் பராமாரிப்புகள் இந்த வருஷம் குறைஞ்சிருக்கு. ஹெர்பல் புராடக்ட்ஸ் விலையும் மிடில் கிளாஸ், அடித்தட்டு மக்களுக்கு எட்டாக்கனியா மாறியிருக்கு...’’ என்கிறார் ரம்யா அழகேந்திரன்.
ஷாலினி நியூட்டன்
|