முன்னாள் முதல்வர் பேரனுடன் ஸ்ரீதேவி மகள்!
டேட்டிங்... பிரேக்கப்... என்பதெல்லாம் பாலிவுட்டில் சகஜம். ஆனால், இது அப்படியல்ல. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் ஸ்டாருமான ஜான்வி கபூர், தன் பாய் ஃப்ரெண்ட் ஷிகர் பஹரியாவுடன் விழாக்களில் தோன்றுவதும் இருவரும் நெருக்கமாக போஸ் தருவதும் பலரின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.
இத்தனைக்கும் இருவரும் நடுவில் பிரேக்கப் செய்திருப்பதாகச் செய்திகள் கசிந்தன. ஆனால், சமீபத்தில் இருவரும் மாலத்தீவுக்கு ஒன்றாக சென்று விடுமுறையை கொண்டாடியதும்; கடந்த வாரம் நடைபெற்ற ஃபேஷன் ஷோவுக்கு கைகோர்த்தபடி இருவரும் வலம் வந்ததும் அவலை மெல்ல வைத்திருக்கிறது.
இதற்கெல்லாம் சிகரமாக ஜான்வி கபூர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்துக்கு லவ் ஈமோஜியுடன் ‘மா செரி’ என ஷிகர் எழுதியிருந்தார். இந்த ஃப்ரெஞ்சு வார்த்தைக்கு அர்த்தம், ‘என் அன்பு இதயம்’. ஷிகர் பஹரியா, முன்னாள் மத்திய அமைச்சரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் என்பதுதான் இவ்வளவு களேபரத்துக்கும் காரணம்!
காம்ஸ் பாப்பா
|