சல்மான் - பூஜா ஹெக்டே காதலா?
ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் வயித்தெரிச்சலையும் கொட்டிக் கொண்ட செய்தி இதுதான்.இந்தி நடிகர் சல்மான் கானும் பூஜா ஹெக்டேவும் காதலிக்கிறார்கள்! 50 வயதில் இருக்கும் சல்மான், பலமுறை காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். என்றாலும் இன்றுவரை யாரையும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இப்போது இளம் நடிகையான பூஜா ஹெக்டேவும் அவரும் மணவாழ்வில் இணையப்போகிறார்கள் என்று செய்தி பரவினால் ரசிகர்களின் வயிறு எரியத்தானே செய்யும்..? ஆனால், தோண்டித் துருவி விசாரித்தால் பக்கென்று இன்னொரு பூதம் கிளம்புகிறது!
அதாவது உண்மையில் இருவரும் காதலிக்கவில்லையாம்! சல்மானும் பூஜா ஹெக்டேவும் இணைந்து இப்போது ‘கிஸி கா பாய் கிஸி கா ஜான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அந்தப் படத்தின் ப்ரொமோஷனுக்காக யூனிட்டே இப்படியொரு செய்தியை கசியவிட்டிருக்கிறதாம்! என்றாலும் வேறு சிலர் இச்செய்தி உண்மைதான் என கண்சிமிட்டுகிறார்கள். எது எப்படியோ கத்தரிக்காய் கடைக்கு வரும் வரை எதுவும் நிச்சயமில்லை!
காம்ஸ் பாப்பா
|