உலகக் கோப்பை 2022!



உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக் கோப்பை கால்பந்து 2022 போட்டிகள் தொடங்க இன்னும் இரு வாரங்களே உள்ளன.நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை ஒருமாத காலம் ரசிகர்களை கட்டிப்போட இருக்கிறது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள். இதில் போட்டியை நடத்தும் கத்தார் உள்பட மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன.  

1930களில் இருந்து இதுவரை நடந்த உலகக் கோப்பைகள் எல்லாம் மே, ஜூன், ஜூலைகளில்தான் நடத்தப்பட்டு வந்தன. இப்போது முதல்முறையாக நவம்பர், டிசம்பர் என குளிர்காலத்தில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

காரணம், கோடைகாலத்தில் கத்தாரில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்பதால். அடுத்ததாக, அதிக செலவு செய்து நடத்தப்படும் உலகக் கோப்பை இதுவே. உள்கட்டமைப்பு, ஹோட்டல், ஸ்டேடியம் கட்ட என கத்தார் 200 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  இதற்காக ஏழு புதிய கால்பந்து மைதானங்களைக் கட்டியிருக்கிறது; ஒரு மைதானத்தை புதுப்பித்திருக்கிறது.

பிகே