பயோடேட்டா-ரிஷி சுனக்



பெயர் : ரிஷி சுனக்.

பிறந்த இடம் மற்றும் தேதி : இங்கிலாந்தின் ஹேம்ஸ்பையர் கவுன்டியிலுள்ள சௌதாம்ப்டன் நகரில் மே 12, 1980ல் பிறந்தார்.

குடும்ப வரலாறு: ரிஷி சுனக்கின் தந்தை வழி தாத்தாவான ராம்தாஸ் சுனக் இன்றைய பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா நகரைச் சேர்ந்தவர். பிழைப்புக்காக 1935ல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்குச் சென்றார். கென்யாவின் தலைநகரான நைரோபியில்அரசியல் : பெற்றோர்கள் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்வதை சிறு வயதில் ரிஷி கண்டிருக்கிறார். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில், தான் பார்த்து வந்த பெரிய வேலைகளை விட்டு அரசியலில் குதித்தார். 2015ல் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார்.

2019ல் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது கருவூலத்தில் முதன்மை செயலாளராக உயர்ந்தார் ரிஷி. 2020ல் சான்சிலர் ஆனார். நிதி அமைச்சருக்கு இணையான பணி இது. இங்கிலாந்தின் பொருளாதாரத்தையும், நிதி சார்ந்த விஷயங்களையும் கவனிக்க வேண்டும். கொரோனா லாக்டவுனில் பொருளாதார ரீதியாக சிறப்பாகச் செயல்பட்டார் ரிஷி. 2020 வரைக்கும் கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்தவராக இருந்தார் ரிஷி.

கோவிட் காலத்தில் அவருடைய செயல்பாடு இங்கிலாந்து முழுவதும் ரிஷியைப் பிரபலமாக்கியது. கடந்த ஜூலையில் சான்சிலர் பொறுப்பில் இருந்து விலகிய ரிஷி, பிரதமர் போட்டிக்குத் தயாரானார். அக்டோபர் 24ல் கன்சர்வேட்டிவ் கட்சிக்குத் தலைவராகி, அடுத்த நாள் பிரதமராகிவிட்டார்.

கிளர்க்காக பணியாற்றினார் ராம்தாஸ். அங்கே தில்லியைச் சேர்ந்த சுகாக் ராணி சுனக்கை மணமுடித்தார். ராம்தாஸ் - சுகாக் தம்பதியின் மகன்தான் யஸ்வீர் சுனக். 1960களில் கென்யாவிலிருந்து இங்கிலாந்து  இடம் பெயர்ந்தது ராம்தாஸ் சுனக்கின் குடும்பம்.ரிஷி சுனக்கின் தாய்வழி தாத்தாவான ரகுபீர் செயின் பெரி என்பவர் தான்சானியாவில் உள்ள வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அங்கேயே சிரக்‌ஷா என்ற 16 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் ரகுபீர்.

இத்தம்பதியின் மகள்தான் உஷா. திருமணத்தின்போது சிரக்‌ஷா அணிந்திருந்த நகைகளை விற்று 1966ல் ரகுபீரின் குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது. இங்கிலாந்தின் வருமானத்துறையில் ரகுபீருக்கு வேலை கிடைத்தது.இங்கிலாந்தில் பொது மருத்துவராகப் பணியாற்றி வந்த யஸ்வீர் சுனக்கிற்கும், மருந்தாளுநரான உஷாவிற்கும் திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்குப் பிறந்தவர்தான் ரிஷி சுனக்.

கல்வி: இங்கிலாந்தின் பழமையான போர்டிங் ஸ்கூலான வின்செஸ்டர் காலேஜில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள லிங்கன் கல்லூரியில் தத்துவம், அரசியல், பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம். பிறகு உலகின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்டான்போர்டில் எம்பிஏவை முடித்தார். ஸ்டான்போர்டில் படிக்கும்போதுதான் தனது வருங்கால மனைவியான அக்‌ஷதா மூர்த்தியைச் சந்தித்தார் ரிஷி.

திருமணம் : ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான நாராயணமூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தியை 2009ம் வருடம் திருமணம் செய்தார் ரிஷி சுனக். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சமீபத்திய அடையாளம்: அக்டோபர் 25, 2022லிருந்து இங்கிலாந்தின் பிரதமர்.

கட்சி : கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் ரிஷி சுனக். இக்கட்சியின் தலைவரும் இவரே.

சொத்து மதிப்பு : ரிஷி - அக்‌ஷதா தம்பதியினரின் சொத்து மதிப்பு சுமார் 7000 கோடி ரூபாய். இங்கிலாந்தின் பணக்காரர்கள் வரிசைப் பட்டியலில் 222வது இடத்தில் இருக்கின்றனர் இத்தம்பதியினர்.

சிறப்புகள் : இந்திய வம்சாவளியிலிருந்து வந்து இங்கிலாந்தின் பிரதரமரான முதல் நபர், இங்கிலாந்தின் பிரதமரான முதல் இந்து மற்றும் முதல் பிரிட்டிஷ் ஆசியர், வெள்ளையர் அல்லாத இங்கிலாந்தின் முதல் பிரதமர், கடந்த 200 வருடங்களில் இங்கிலாந்தின் பிரதமரானவர்களில் மிக இளம் வயதுடையவர், பாராளுமன்றத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்ற ஏழு வருடங்களில் பிரதமர் பதவியை அடைந்தவர், இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பிரதமர்... என சிறப்புகள் நீள்கின்றன.

முதல் வேலை: பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறை நாட்களில் சௌதாம்ப்டன் நகரில் உள்ள ஓர் இந்திய உணவகத்தில் வெயிட்டராகப் பணிபுரிந்திருக்கிறார் ரிஷி சுனக். பிறகு படிப்பை முடித்தபிறகு 2001 முதல் 2004ம் ஆண்டு வரை ‘கோல்டுமேன் சாக்ஸ்’ எனும் முதலீட்டு வங்கியில் முக்கிய பொறுப்பு வகித்தார். அடுத்த சில வருடங்கள் முக்கிய நிதி
நிறுவனங்களில் பணியாற்றினார்.

பொழுதுபோக்கு : கிரிக்கெட், கால்பந்து, திரைப்படங்கள்.

வருமானம் : இங்கிலாந்தின் பிரதமர் பதவி வகிப்பவருக்கு ஆண்டுதோறும் 1.50 கோடி ரூபாய் வருமானம் கொடுக்கப்படுகிறது. இதுபோக தங்குவதற்கு பிரமாண்ட மாளிகை, பயணத்துக்கு பிரைவேட் விமானம் என ஏராளமான சலுகைகள் உண்டு.

பெயர் : ரிஷி சுனக்.

பிறந்த இடம் மற்றும் தேதி : இங்கிலாந்தின் ஹேம்ஸ்பையர் கவுன்டியிலுள்ள சௌதாம்ப்டன் நகரில் மே 12, 1980ல் பிறந்தார்.

குடும்ப வரலாறு: ரிஷி சுனக்கின் தந்தை வழி தாத்தாவான ராம்தாஸ் சுனக் இன்றைய பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா நகரைச் சேர்ந்தவர். பிழைப்புக்காக 1935ல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்குச் சென்றார். கென்யாவின் தலைநகரான நைரோபியில்

அரசியல் : பெற்றோர்கள் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்வதை சிறு வயதில் ரிஷி கண்டிருக்கிறார். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில், தான் பார்த்து வந்த பெரிய வேலைகளை விட்டு அரசியலில் குதித்தார். 2015ல் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். 2019ல் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது கருவூலத்தில் முதன்மை செயலாளராக உயர்ந்தார் ரிஷி. 2020ல் சான்சிலர் ஆனார். நிதி அமைச்சருக்கு இணையான பணி இது. இங்கிலாந்தின் பொருளாதாரத்தையும், நிதி சார்ந்த விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

கொரோனா லாக்டவுனில் பொருளாதார ரீதியாக சிறப்பாகச் செயல்பட்டார் ரிஷி. 2020 வரைக்கும் கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்தவராக இருந்தார் ரிஷி.
கோவிட் காலத்தில் அவருடைய செயல்பாடு இங்கிலாந்து முழுவதும் ரிஷியைப் பிரபலமாக்கியது. கடந்த ஜூலையில் சான்சிலர் பொறுப்பில் இருந்து விலகிய ரிஷி, பிரதமர் போட்டிக்குத் தயாரானார். அக்டோபர் 24ல் கன்சர்வேட்டிவ் கட்சிக்குத் தலைவராகி, அடுத்த நாள் பிரதமராகிவிட்டார்.

வாக்குறுதி :  இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல்களைச் சரி செய்வதுதான் ரிஷியின் முக்கிய வாக்குறுதி.

த.சக்திவேல்