இடுப்பு தீபாவளி!
‘‘தீபாவளின்னாலே பட்டாசு, என் குடும்பம், அதைவிட முக்கியமா புதுப் படங்கள் ரிலீஸ். எப்படியாவது அன்னைக்கு ரிலீஸ் படம் பார்த்திடுவேன். அன்னைக்கு ஒரு நாள் டயட்லாம் ஏதும் கிடையாது. இஷ்டத்துக்கு சாப்பிடுவேன். ஃபிரண்ட்ஸ், குடும்பமா ஒண்ணாகிடுவோம். செம கலாட்டாவா இருக்கும்.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/28.jpg) எனக்கு பட்டாசு வெடிக்க அவ்ளோ பிடிக்கும். படபடன்னு வெடிச்சுத் தள்ளுற சரவெடி, ராத்திரியிலே வானத்திலே கலர்ஃபுல் ஷாட்ஸ் எல்லாம் என் ஃபேவரைட். ஆனா, டிரஸ் மாதிரியே ஸ்வீட் மோகமும் இப்ப குறைஞ்சுடுச்சு. அப்ப அம்மா வீட்டிலேயே செய்வாங்க. இப்ப கடைல வாங்கிடறோம்...’’ என்கிறார் அடிக்கடி தன் இடுப்பை மையப்படுத்தி போட்டோ ஷூட் நடத்தி இளசுகளை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்.
ஷாலு
|