தேன் தீபாவளி!



‘‘தீபாவளி பண்டிகையை எங்கள் வீட்டில் எப்போதும் சிறப்பாக கொண்டாடுவோம். காரணம், சின்ன வயதிலிருந்து புத்தாடை அணியும் அந்த சந்தோஷம் வெரி ஸ்பெஷல்.
ஏனெனில், பள்ளி நாட்களில் அதிகமாக பள்ளி சீருடைகள்தான் அணிவோம். கலர் டிரஸ் அணிவது என்பது தனி மவுசு. தீபாவளி ஷாப்பிங் எப்போதும் சந்தோஷத்தைக் கொடுக்கும். பாரம்பரியம் மாறாமல் புது ஆடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவோம்.

நாங்கள் கூட்டுக் குடும்பம். எங்க வீட்டில் பதினைந்து பேர் இருக்கிறோம். என்னுடைய பெரியப்பா குடும்பம், சித்தப்பா குடும்பம் எல்லோரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவோம்.
பெரியவர்கள் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கி அவர்கள் கையால் புது ஆடைகளை வாங்கும்போது புது ரூபாய் நோட் கொடுத்து ஆசீர்வாதம் செய்வார்கள். அதன் பிறகு வெடி வெடிக்க ஆரம்பிப்போம்.

முதல் வெடியாக ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் சரவெடியுடன் ஆரம்பிப்போம். பிறகு டிபன் சாப்பிடுவோம். பகலில் வெடிக்க வேண்டிய வெடிகளை மொத்தமாக வெடிக்க ஆரம்பிப்போம்.
எல்லாம் முடிந்ததும் புதுப் படம் பார்க்க தியேட்டருக்கு போவோம் அல்லது எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரியாணி சமைப்போம். மாலையில் கோயில் விசிட், புஸ்வாணம் வெடித்து அன்றைய தீபாவளியை நிறைவு செய்வோம். இந்த கொண்டாட்டம் மூன்று நாளுக்கு தொடரும். இதில் ஹைலைட் நாங்கள் கூட்டுக்குடும்பமாக கொண்டாடுவதுதான். இதனாலேயே ஒவ்வொரு பண்டிகையும், குறிப்பாக தீபாவளி, மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

இந்த ஆண்டும் அப்படி அட்டகாசமான தீபாவளியாக எங்கள் குடும்பத்தினருக்கு அமையப் போகிறது. உங்கள் அனைவருக்கும் அப்படியே அமையும் என மனதார நம்புகிறேன்; பிரார்த்தனை செய்கிறேன்...’’ என்கிறார் ‘தேன்’ படத்தின் வழியே ரசிகர்களை கவனிக்க வைத்த அபர்ணா.

செய்தி: சுரேஷ்

படங்கள்:பிரவீன் ரவீந்தர்