ஐஸ் தீபாவளி!



‘‘தீபாவளி என்றாலே குடும்பமாக கொண்டாடி மகிழ்வது தான் ஞாபகத்துக்கு வரும். அந்த சந்தோஷம் இப்போது கொஞ்சம் அதிகமாகியுள்ளது.
எங்கள் வீட்டுக்கு இப்போது காபி என்ற செல்ல நாய்க்குட்டி புதுவரவாக வந்துள்ளது. கருப்பு காபி எனக்கு பிடிக்கும் என்பதால் நாய்க்குட்டிக்கு காபினு பேர் வெச்சுட்டேன்.

இவர்களுடன்தான் என்னுடைய தீபாவளி இருக்கும். வருடத்தில் பல நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்பதால் வீட்டில் இருக்கும் நேரம் குறைவாகவே இருக்கும். அதனால் தீபாவளி அன்று நாள் முழுவதும் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவிடுவதுதான் என்னுடைய முக்கிய நோக்கமாக இருக்கும்.

சின்ன வயதில் பட்டாசு எனக்கு பிடிக்கும். வளர்ந்தபிறகு தான் பட்டாசு ஏற்படுத்தும் மாசு, சுற்றுச்சுழலுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று புரிந்தது. அதனால் கம்பி, திரி போன்ற குறைந்தளவு மாசு ஏற்படுத்தும் பட்டாசு கொளுத்துவேன். மற்றபடி, காலையில் சீக்கிரம் எழுந்து தயாராகிவிடுவேன். பூஜை, டிபன் முடிந்ததும் தீபாவாளி அன்று ரிலீஸாகியிருக்கும் புது படத்துக்கு ஃபேமிலியா தியேட்டருக்கு போவோம். மாலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் படம் பார்ப்போம்.

இந்த வருடம் அசோக் செல்வனுடன் நடித்த ‘வேழம்’ படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. தெலுங்கில் நான்கு பெரிய படங்கள் பண்ணுகிறேன். அதுல ஒரு படம் பான் இந்தியா படம். அந்தப் படத்துல ‘சர்தார்’ கார்த்தி மாதிரி ஸ்பை கேரக்டர் பண்ணுகிறேன்...’’ என்கிறார் ‘நான் சிரித்தால்’, ‘தமிழ்ப் படம் 2’ உட்பட எண்ணற்ற படங்களில் நடித்த, நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன்.

சுரேஷ்