அர்த்தமுள்ள தீபாவளி!
‘‘தீபாவளின்னாலே சின்ன வயசு ஞாபகங்கள்தான் எப்போதும் வரும். ஒரு மாசத்துக்கு முன்னாடியே புது டிரெஸ் வந்துடும். தினம் தினம் நாட்களை எண்ணிக்கிட்டே இருப்போம். இன்னும் 20 நாட்கள்தான் இருக்கு... 19 நாட்கள்தான் இருக்கு... 10 நாட்கள்தான் இருக்கு... 5 நாட்கள்தான் இருக்கு... இப்படி!
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/26.jpg) ஏன்னா, எப்போடா அந்த டிரெஸ் போடப் போறோம்னு அவ்ளோ எதிர்பார்ப்புகள் இருக்கும். இதுக்காகவே நைட் எல்லாம் தூங்காம இருப்போம். ஒவ்வொரு நாள் முடிஞ்சதும் ‘அப்பாடா... இன்னும் கொஞ்சநாள்தான்’னு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.அப்ப பட்டாசு வெடிக்கக் கூட அவ்ளோ ஆர்வம் காட்டுவோம். இப்ப புது டிரெஸ் ஆர்வமெல்லாம் மொத்தமா போயிடுச்சு.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/26a.jpg) ஏன்னா போட்டோ ஷூட், சினிமா ஷூட்டிங், டிவி ஷோஸ், மாடலிங்னு தினம் தினம் புது டிரெஸ் போட்டுக்கறதால அந்த ஆசை, படபடப்பு, நாட்களை எண்ணுவது எல்லாம் இப்ப இல்ல. அதே போல ஒரு நாலஞ்சு வருஷங்களா எனக்கு பட்டாசு வெடிக்கறதிலேயும் விருப்பம் இல்லாம போயிடுச்சு. பட்டாசு வெடிக்கும் போது நாய், பூனை, பறவைகள் எல்லாம் எவ்ளோ பயப்படும், எவளோ இடைஞ்சலா ஃபீல் பண்ணும்னு தெரிஞ்சதுதான் இதுக்குக் காரணம். அதனாலயே பட்டாஸ் மேலே இருந்த ஆர்வமும் குறைஞ்சிடுச்சு.
ஆனா, எப்படியாவது ஏதாவது ஒரு ஹோமுக்கு டொனேஷன், அங்க இருக்கும் குழந்தைகள் கூட கொண்டாட்டம்னு இப்பவும் அந்த நாளை கொண்டாடறேன்.இன்னொரு பெரிய சந்தோஷம்... கடந்த ஆறேழு வருஷங்களா எங்க அம்மாவுக்கு தவறாம என் சொந்த சம்பாத்தியத்துல தீபாவளி புடவைகள் வாங்கிக் கொடுக்கறேன்.இதை நான் வாழ்ந்த, வாழற வாழ்க்கைக்கான அர்த்தமா பார்க்கறேன்...’’ என்கிறார் ‘நாய் சேகர்’ படத்தின் ஹீரோயினான பவித்ரா லட்சுமி.
ஷாலு
|