புடவை தீபாவளி!
‘‘நாங்கள் பெங்களூருவில் செட்டிலான தமிழ்க் குடும்பம். ஆனாலும் ஃபெஸ்டிவல் என்று வரும்போது பாரம்பரியம் மாறாது. அக்கம் பக்கத்துல என்ன மாதிரி கொண்டாட்டம் இருக்குமோ அதேமாதிரிதான் எங்கள் வீட்டிலும் கொண்டாட்டம் இருக்கும். காலையில் எழுந்ததும் குளித்து முடித்து பூஜை நடக்கும். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரை அப்பா, அம்மா, நான், தம்பி என குடும்பத்துடன் மட்டுமல்ல அக்கம் பக்கத்தினருடன் தீபாவளி கொண்டாடியுள்ளேன்.
என்ஜினீயரிங் படிக்கும் போது லீவு அதிகம் கிடைக்கும். அந்த சமயத்தில் பாண்டிச்சேரியில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துவிடுவோம். அங்கு மொத்த சொந்தங்களுடன் தீபாவளி கொண்டாடுவது செம ஜாலியாக இருக்கும். ஐ.பி.எம்.ல வேலை செய்யும்போது சில வருடங்கள் தீபாவளி கொண்டாட முடியாமல் போனது. காரணம், லீவு தரமாட்டார்கள். அந்த மாதிரி சமயத்தில் கொடுமையாக இருக்கும்.
சினிமாவுக்கு வந்த பிறகு தீபாவளி ஸ்பெஷலா மாறியது. கடந்த வருடம் இரண்டு படங்கள் வெளியானது. இந்த வருடம் ‘கோப்ரா’ ரிலீஸானது. ஃபெஸ்டிவல் சமயத்தில் படங்கள் வெளியாகும்போது புரோமோஷன் வேலைகள் இருப்பதால் தீபாவளி கொண்டாட முடியாது.
எப்போதும் புடவை எனக்கு பிடித்த ஆடை. டிரெண்டிங்ல எப்போதும் இடம் பிடிக்கக்கூடிய ஆடை புடவை. பட்டாசுத் துகள் வீழ்ந்து ஆடை பொத்தலாக மாறிவிடும் என்பதால் அடுத்த நாள்தான் புது ஆடைகளை அணிவேன்...’’ என்கிறார் மிருணாளினி.
சுரேஷ்
|