பாடிபில்டிங் விலை ரூ.1 கோடி!
இன்று 30 - 40 வயதுள்ளவர்களின் ரோல் மாடல் என ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகரை சொல்லலாம்.பாடிபில்டராக இருந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறிய இவர், பல அதிரடி திரைப்படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார். பின்னர் நம்ம ஊர் எம்ஜிஆரைப் போலவே அரசியலில் நுழைந்த அர்னால்ட், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/14.jpg) வாழ்க்கை ஒரு சக்கரம் அல்லவா... பாடிபில்டிங்கில் இருந்து சினிமா, அரசியல் ஆகியவற்றில் கால் வைத்த அர்னால்ட் இப்போது மீண்டும் பாடி பில்டிங்கிற்கு திரும்பியுள்ளார். ஆனால், இம்முறை அவர் மாறியது பாடி பில்டராக அல்ல. பாடி பில்டிங் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி ஆசிரியராக!என்ன... அர்னால்டிடம் பயிற்சி எடுக்க வேண்டுமென்றால் இந்திய மதிப்பில் ரூபாய் ஒரு கோடியை ஃபீஸாகத் தர வேண்டும். அதுவும் ஒரு செஷனுக்கு!இதற்கு அமெரிக்க செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்!
காம்ஸ் பாப்பா
|