பயோடேட்டா - தீபாவளி



பெயர்: பொதுவாக தீபாவளி அல்லது தீவாளி. சமஸ்கிருதத்தில் இருந்து இந்தப் பெயர் வந்தது. ஒளியின் வரிசை என்று இதற்குப் பொருள். 
சமணர்கள் வாழும் இடங்களில் தீவாளி, மலேசியாவில் ஹரி தீவாளி, தாய்லாந்தில் லாம் கிரியோங், நேபாளத்தில் திகார் அல்லது ஸ்வாந்தி, சீனாவில் லேன்ட்ர்ன் ஃபெஸ்டிவல்... என தீபாவளிக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர்.

அரசு விடுமுறை: இந்தியா மட்டுமல்லாமல் ஃபிஜி, கயானா, மலேசியா, மொரீசியஸ், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை, சுரிநாம், டிரினிடாட் அண்ட் டொபாகோ ஆகிய நாடுகளிலும் தீபாவளியன்று அரசு விடுமுறை.

லெய்சஸ்டர்: இங்கிலாந்தில் உள்ளது லெய்சஸ்டர் நகரம். இந்தியாவைத் தாண்டி அதிக மக்களால் தீபாவளி கொண்டாடப்படும் ஓர் இடமாகத் திகழ்கிறது லெய்சஸ்டர். உலகின் தீபாவளி தலைநகரம் என்று புகழப்படுகிறது இந்நகரம். தீபாவளியன்று லெய்சஸ்டர் முழுவதும் விருந்துகளும், தெருக்களில் கொண்டாட்டங்களும் களைகட்டும். இதைப் பார்ப்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து லெய்சஸ்டருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது இதில் ஹைலைட்.

நம்பிக்கைகள் : செல்வ வளங்களின் கடவுளான லட்சுமி தீபாவளியன்று பூமிக்கு வருவார். அவரை வீட்டுக்குள் வரவேற்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் தீபங்கள் ஏற்றப்
படுகின்றன; வீட்டின் கதவும், ஜன்னல்களும் மூடப்படாமல் திறந்து வைக்கப்படுகின்றன என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. தவிர, தீய சக்திகளை நல்ல சக்திகள் வெற்றிகொண்டதைக் கொண்டாடும் விழா தீபாவளி என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது.

உதாரணங்களாக, ராவணனை வெற்றிகொண்டு சீதாவை ராமன் மீட்டெடுத்ததை வட இந்தியர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். தென்னிந்தியாவில் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்றதை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். அதுபோலவே தீபாவளியன்று பெங்காலில் கெட்ட சக்திகளை அழித்த காளியைக் கொண்டாட காளி பூஜை  நடத்தப்படுகிறது. இதுபோக இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளி தினத்தை இந்து மதத்தின் புது வருடமாக நம்புகின்றனர்; நிதியாண்டின் ஆரம்பமாகவும் கருதுகின்றனர்.

ஷாப்பிங் : தீபாவளி பண்டிகையை ஒட்டிய நாட்களில்தான் இந்தியர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்கின்றனர். புது ஆடை, தங்க நகைகள், பரிசுப்பொருட்கள், பட்டாசு, இனிப்பு வகைகள், வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் என பலவற்றை வாங்கிக் குவிக்கின்றனர். தீபாவளியைக் கொண்டாட இந்தியாவில் உள்ள 75 சதவீத வீடுகள் 5000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றன என்று ஓர் ஆய்வு சொல்கிறது.   

ரங்கோலி : தீபாவளியின்போது கோலப் பொடியையும், மலர்களையும் வைத்து படைக்கப்படும் ரங்கோலி கோலம் ரொம்பவே பிரபலமானது. லட்சுமியை வீட்டுக்குள் வரவேற்கும்விதமாக இந்த ரங்கோலி கோலங்கள் இடப்படுகின்றன.

சமணம் : மகாவீரர் மோட்சம் அடைந்த நாளை தீபாவளியாக சமணர்கள் கொண்டாடுகின்றனர். மகாவீரரின் நினைவைப் போற்றும் விதமாகவும் சமணர்களால் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

சீக்கியர்கள் : சீக்கிய மதத்திலுள்ள பத்து குருக்களில் ஆறாவது குரு ஹர்கோவிந்த். முகலாயப் பேரரசின் சிறையிலிருந்து ஹர்கோவிந்த் விடுதலையான நாளை சீக்கியர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். பண்டி சோர் தீவாஸ் என்று சீக்கியர்களால் தீபாவளி அழைக்கப்படுகிறது.

சிறப்பு :  உலகின் பழமையான பண்டிகைகளில் ஒன்று, தீபாவளி. 2,500 வருடங்களுக்கு முன்பிலிருந்து தீபாவளி கொண்டாடப்பட்டு வருவதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.
உலகம் முழுவதும் வெவ்வேறு மரபுகளில், வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு காரணங்களுக்காக சுமார் 100 கோடிப்பேர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு தினங்களில், அதாவது அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நிலவின் நிலையைப் பொறுத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகையும் இதுதான்.  
கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்றவை மதங்களுக்கு உரிய பண்டிகைகள்.

ஆனால், தீபாவளி இந்து மதத்தினரால் மட்டுமல்லாமல் சீக்கியர்கள், சமணம், புத்த மதத்தில் சில பிரிவினர் மற்றும் மதங்களைப் பின்பற்றாதவர்களாலும் கொண்டாடப்படுகிறது. அதனால் மதத்தைத் தாண்டிய ஒரு பண்டிகையாக மிளிர்கிறது தீபாவளி. ஒரு பண்டிகைக்கு நிறைய கதைகளும், காரணங்களும் இருப்பதும் தீபாவளிக்கு மட்டும்தான்.

கொண்டாட்டம் : தென்னிந்தியாவில் ஒரே நாள் மட்டும்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால், வடக்கு மற்றும் வட மேற்கு இந்தியப் பகுதிகளில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது தீபாவளி.

தங்கம் : உலகத்தில் உள்ள தங்கத்தில் 11 சதவீத தங்கம் இந்திய வீடுகளில்தான் உள்ளது. குறிப்பாக தீபாவளிக்கு முந்தைய இரண்டு, மூன்று நாட்களில்தான் இந்தியர்கள் அதிக தங்கத்தை வாங்குகின்றனர்.

அமைதி : இந்திய - பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் ஒரு பதற்றம் நிலவும். தீபாவளியன்று மட்டுமே அங்கே அமைதி வரும். ஆம்; பகையைக் கைவிட்டு, எல்லையைக் கடந்து இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் வாழ்த்துகளையும், இனிப்பையும் பகிர்ந்துகொள்வார்கள். இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று
அரங்கேறுகிறது.

பட்டாசு : தீபாவளிஅன்று பட்டாசு வெடிக்கும் கொண்டாட்டம் 1900களில் இருந்துதான் சேர்ந்திருக்கிறது. அப்போது பெரும் பணக்காரர்கள் மட்டுமே பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடியிருக்கின்றனர். இன்று பட்டாசு இல்லாமல் தீபாவளியே இல்லை. இந்தியா முழுவதும்  தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளில் 90 சத
வீதம் சிவகாசியில் உற்பத்தியாகின்றன. சமீப வருடங்களில் சிவகாசிக்குப் போட்டியாக சீனப்பட்டாசுகளும் வந்துவிட்டன.

நம்பிக்கைகள் : செல்வ வளங்களின் கடவுளான லட்சுமி தீபாவளியன்று பூமிக்கு வருவார். அவரை வீட்டுக்குள் வரவேற்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் தீபங்கள் ஏற்றப்
படுகின்றன; வீட்டின் கதவும், ஜன்னல்களும் மூடப்படாமல் திறந்து வைக்கப்படுகின்றன என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

தவிர, தீய சக்திகளை நல்ல சக்திகள் வெற்றிகொண்டதைக் கொண்டாடும் விழா தீபாவளி என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது. உதாரணங்களாக, ராவணனை வெற்றிகொண்டு சீதாவை ராமன் மீட்டெடுத்ததை வட இந்தியர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். தென்னிந்தியாவில் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்றதை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.

அதுபோலவே தீபாவளியன்று பெங்காலில் கெட்ட சக்திகளை அழித்த காளியைக் கொண்டாட காளி பூஜை  நடத்தப்படுகிறது. இதுபோக இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளி தினத்தை இந்து மதத்தின் புது வருடமாக நம்புகின்றனர்; நிதியாண்டின் ஆரம்பமாகவும் கருதுகின்றனர். ஷாப்பிங் : தீபாவளி பண்டிகையை ஒட்டிய நாட்களில்தான் இந்தியர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்கின்றனர். புது ஆடை, தங்க நகைகள், பரிசுப்பொருட்கள், பட்டாசு, இனிப்பு வகைகள், வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் என பலவற்றை வாங்கிக் குவிக்கின்றனர். தீபாவளியைக் கொண்டாட இந்தியாவில் உள்ள 75 சதவீத வீடுகள் 5000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றன என்று ஓர் ஆய்வு சொல்கிறது.   

த.சக்திவேல்